மகளிருக்கு ரூ.100000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா??இந்த தகுதி இருந்தால் விண்ணப்பிக்க முடியும்!!
நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த சுய உதவிக் குழுக்கள் ஏழை பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி சிறந்த தொழில் முனைவோர்களாக மாற்றி வருகிறது.
இந்த சுய உதவிக் குழுக்கள் அதிகப்பட்சம் 12 முதல் 20 பெண்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக இயங்கி வருகிறது.தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களை தமிழ்நாடு அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் இயக்கி வருகிறது.இதன் முக்கிய அம்சம் எளிதில் கடன் பெறும் வசதி இருப்பது தான்.கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் எளிதில் வங்கி கடன் பெற முடியும்.
ஒவ்வொரு சுய உதவிக் குழுவிற்கும் தலைவி மற்றும் துணை தலைவி இருப்பார்கள்.இந்த மகளிர் குழுவில் சேரும் பெண்கள் மாதந்தோறும் ரூ.210 கட்ட வேண்டும்.ரூ.200 தங்களின் சேமிப்பு கணக்கில் சேர்ந்து விடும்.ரூ.10 சந்தா பணம் ஆகும்.
நம் சேமிப்பில் இருந்து கடன் பெறும் வசதியும் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ளது.அதேபோல் தங்களை தொழில் முனைவோராக மாற்றிக் கொள்ள சுய உதவிக் குழுவில் உள்ள ஒரு பெண்ணிற்கு அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.ஒரு குழுவிற்கான அதிகப்பட்ச கடன் தொகை ரூ.15,00,000 ஆகும்.கடன் பெற்றவர்கள் அடுத்த 4 ஆண்டிற்குள் அதை அசல் + வட்டியுடன் முழுமையாக செலுத்தி விட வேண்டும்.
மத்திய அரசின் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் தொழில் முனைவோருக்கான கடன் வழங்கப்படுகிறது.இந்த திட்டம் குறித்த விவரம் மற்றும் எவ்வாறு கடன் பெறுவது என்பது குறித்து அறிந்து கொள்ள தங்களுக்கு அருகில் உள்ள வங்கி அல்லது மகளிர் சுய உதவிக்குழு கணக்கு தொடங்கப்பட்ட வங்கியை அணுகவும்.