Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருந்து மாத்திரை தேவை இல்லை..  10 நாளில் நரம்பு தளர்ச்சியை சரி செய்யலாம்!!

#image_title

 

மருந்து மாத்திரை தேவை இல்லை..  10 நாளில் நரம்பு தளர்ச்சியை சரி செய்யலாம்!!

நரம்பு தளர்ச்சி, கை கால் ஆட்டம், நரம்பு வீக்கம், கை கால் நடுக்கம் போன்ற பிரச்சனையால் தினமும் வேதனைப்பட்டு கொண்டிருப்போம். இதை சரி செய்ய நிறைய விதமான மருந்து மாத்திரைகளை எடுத்திருப்போம்.

இருந்தும் அது பயன் இல்லாமல் போயிருக்கும். இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இந்த மருந்தை தயார் செய்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம், நரம்பு வீக்கம் போன்ற பிரச்சனைகள் 10 நாட்களில் குணமடைந்துவிடும்.

 

நம் உடலில் இருக்கும் வெர்வ் செல்ஸ் எனப்படும் நியூரான்கள் நமது நரம்புகளை பாதிக்கும். இதனால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது.

 

இந்த நரம்பு தளர்ச்சி நோய் ஒருவருக்கொருவர் மாறுபடும். சிலருக்கு கை, கால், தாடைகளில் நடுக்கம் இருக்கும். சரியாக நடக்க முடியாது. நடக்கும் பொழுது தள்ளாட்டிக் கெண்டே நடப்பார்கள்.

 

சிலருக்கு ஒரு விரல் மட்டும் ஆடத் தொடங்கும். இன்னும் சிலருக்கு தூங்கி எழுந்தாலோ அல்லது உட்கார்ந்து எழுந்தாலோ அவர்களால் உடனே நிற்க முடியாது. ஒரு சிலருக்கு முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இருக்காது. ஒரு சிலருக்கு கை கால் வலி, அதிக வீக்கம் இருக்கும். இது தான் நரம்பு தளர்ச்சியின் அறிகுறியாகும். இந்த மாதிரியான அறிகுறிகள் இருந்தால் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மருந்தை தயாரித்து சாப்பிடலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* மிளகு

* திப்பிலி

* சுக்குப் பொடி

 

மருந்தை தயார் செய்யும் முறை…

 

முதலில் எடுத்து வைத்துள்ள மிளகு மற்றும் திப்பிலியை உரலில் சேர்த்து இடித்துக் கொள்ளவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்து அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் இடித்து வைத்துள்ள பொடி அரை ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். பிறகு சுக்குப் பொடி அரை ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.

 

இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 5 நிமிடம் கொதிக்க வைத்த பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சுவைக்காக சிறிது தேன் கலந்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் கலக்காமல் அப்படியே சாப்பிடலாம்.

 

இந்த மருந்தை காலையில் நேரங்களில் சாப்பிட வேண்டும். அதாவது தூங்கி எழுந்த பிறகு பல் துலக்கிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு இந்த மருந்தை தயார் செய்து குடிக்க வேண்டும். இது மாதிரி தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது பத்து நாட்களில் நரம்பு தளர்ச்சி நோய் குணமடையத் தொடங்கும். இதில் சேர்த்திருக்கும் பொருள்கள் நமது நரம்பு மண்டலத்தை பலமைடையச் செய்யும்.

 

இதை தேனில் கலந்து சாப்பிட வேண்டும் என்றால் மேற்கூறிய அனைத்து பொருள்களையும் மிக்சியில் போட்டு அரைத்து நன்கு பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.

Exit mobile version