Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாமனாரை சரமாரியாக அடித்த பெண் காவலர்! வீடியோ வைரல்!

டில்லியின் லக்ஷ்மி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று மற்றொரு போலீஸ் அதிகாரி முன்னிலையில் பெண் போலீஸ்காரர் தனது வயதான மாமனாரை அடித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தகவல்களின்படி, விஜேந்தர் குப்தா (66) தனது 62 வயது மனைவி வீணாவுடன் லக்ஷ்மி நகரில் உள்ள கர்வாலி மொஹல்லாவில் வசித்து வருகிறார். விஜேந்தர் குப்தாவின் மருமகள் சஞ்சல் டெல்லி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக டிஃபென்ஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். அவர் 2020 இல் அங்கூர் குப்தாவை மணந்தார். திருமணமான நான்கு மாதங்களுக்குப் பிறகு, தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது, அதன் பிறகு சஞ்சல் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை, சஞ்சல் தனது தாயுடன் தனது மாமியார் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டத் தொடங்கி உள்ளனர், வயதான தம்பதியினர் இருவரும் போலீசாருக்கு போன் செய்து இதுபற்றி தெரிவித்து உள்ளனர்.

போலீஸ்காரர் வருவதற்கு முன்பு பெண் சப்-எடிட்டர் தனது மாமனாரை பலமுறை அறைந்ததை சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தாக்குதலுக்கு முன், அந்த பெண்ணுக்கும் அவரது தாயாருக்கும் போலீஸ்காரர் முன்பாக முதியவருடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது, அந்த பெண்ணின் மாமனார் அந்த பெண்ணின் தாயை தாக்க முயற்சித்ததும் அந்த பெண் காவல் அதிகாரி தனது மாமனாரை அறைந்து உள்ளார், உடனே அருகில் இருந்த போலிஷ் அதிகாரி அந்த பெண் காவலாளியை தடுக்க முயற்சித்துள்ளார், அந்த முதியவர் உடல் ரீதியாக பாதிக்கபட்டுளார் என சொல்லப்படுகிறது. பெண் காவலர் மீது பிரிவு 323/427 ஐபிசியின் கீழ் போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Exit mobile version