Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் பழிவாங்கும் கொரோனா 3 இறப்பு உறுதியானது!

#image_title

இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் அதிகரிப்பு மற்றும் JN.1 மாறுபாடு கண்டறியப்பட்டதன் மத்தியில், கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் வைரஸ் தொற்று காரணமாக மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

கடந்த புதன்கிழமை என்று மொத்தம் 22 கேசுகள் இருந்த நிலையில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளது என தரவுகள் கூறுகின்றது. அதன் பிறகு எந்த ஒரு இறப்பு எந்த ஒரு தகவலும் இல்லை என்று சுகாதார மையம் கூறியுள்ளது.

 

76 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு கோவிட் பாசிடிவ் ஏற்பட்டுள்ளது அதனால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.

 

44 வயதுமிக்க ஒருவர் அவருக்கு இதய பிரச்சனையால் பல உறுப்புகள் செயலிழந்து உள்ளது. அதில் அவருக்கு கொரோனாவும் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்துள்ளார்.

 

64 வயது உடைய ஒரு முதியவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பசியின்மை, உடல் சோர்வு ஆகியவை ஏற்பட்டுள்ளது அதனால் உயிரிழந்துள்ளார்.

 

எனவே சுகாதார மையம் மக்கள்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாஸ்க் அணிவதை வற்புறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 808 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 359 பெங்களூரு நகர்ப்புறத்தில் எடுக்கப்பட்டது. மாநிலத்தில் நேர்மறை விகிதம் 2.47 சதவீதமாக உள்ளது.

Exit mobile version