Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

#image_title

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியை ஒற்றுமை அதிகரிப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் செலவு ஒன்று வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயது செல்பவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Exit mobile version