மீன் நாற்றம் அடிக்கிறது கீழே இறங்கு! மூதாட்டியிடம் கடுமையாக நடந்த அரசு நடத்துனர்! வைரலாகும் வீடியோ!
இம்முறை சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பிறகு பல எதிர்பார்ப்புகள் இருந்தது. திமுகவா அதிமுகவா அவ்வாறு திமுக வந்தால் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யும் அதிமுக வந்தால் என்ன செய்யும் என பல கேள்விகள் மக்களிடையே இருந்தது.அதேபோல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியைக் கைப்பற்றியதும் தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றார். பதவியேற்றவுடன் முக்கிய ஐந்து அம்சத் திட்டங்கள் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம். அந்த திட்டத்தை கண்டு பெண்கள் பெருமளவு மகிழ்ந்தனர். ஆனால் அத்திட்டம் நடைமுறைக்கு வந்தும் சில ஊழியர்கள் அத்திட்டத்தை கண்ட பெண்களை உதாசீனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திட்டம் வந்த பிறகு பல ஊழியர்கள் மீது பெண்கள் புகார் அளித்து வண்ணமாக தான் உள்ளது. ஏதேனும் ஒரு பெண் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தாள் எந்த நிறுத்தம் வெளியே சென்று விடுகின்றனர். இலவசமாக பயணிக்கின்றனர் என்று கூறி இருந்து நிறுத்துவதில்லை. அதுமட்டுமின்றி பேருந்தில் ஏறும் பெண்களிடமும் சில நடத்துனர்கள் கடுமையாகவே பேசுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது கன்னியாகுமரியில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் வாணியகுடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் செல்வம் மேரி. இவர் அன்றாடம் தனது வாழ்க்கை நடத்துவதற்கு தினந்தோறும் மீன் விற்று வருகிறார். அவ்வாறு இன்று மீன் விற்று வந்ததும் தனது ஊருக்கு செல்ல குளச்சம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். குல் அச்சத்திலிருந்து வாணியங்குடி செல்லும் பேருந்து அம்மூதாட்டி ஏறியுள்ளார். அப்பொழுது பேருந்தின் நடத்துனர் நீ மீன் விற்று வருகிறாயா உன்மீது மீன் துர்நாற்றம் வீசுகிறது பேருந்தை விட்டு கீழே இறங்கு என்று கூறியுள்ளார்.இந்த மூதாட்டி பேருந்தை விட்டு கீழே இறங்கியதும் தனக்கு நடந்ததை பேருந்து நிலையத்தில் கூச்சலிட்டு கூறி நியாயம் கேட்டார்.போக்குவரத்து பொது மேலாளர் அரவிந்த் அவர்கள் இவ்வாறு மூதாட்டியை கீழே இறக்கி விட்ட நடத்துனர் ஓட்டுனர் மற்றும் நேரக் காப்பாளர் ஆகியோரை பணியிடம் நீக்கம் செய்துள்ளனர்.மேலும் குளச்சல் பேருந்து நிலையம் பணிமனை மேலாளரும் தற்போதுதான் இதுகுறித்து எங்களுக்கு புகார்கள் எழுந்துள்ளது, இதுகுறித்து விசாரணை செய்து மக்களிடம் மரியாதையற்று நடந்து கொண்டவர்களுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்தார். மூதாட்டியின் மேலே கண்ட மக்கள் பெருமளவு மன வேதனை அடைகின்றனர்.