முக்கிய பாஜக தலைவர் கைது!  திமுகவின் பதிலடி இதுதானா?

0
131
Leading BJP leader arrested Is this DMK's response?

முக்கிய பாஜக தலைவர் கைது!  திமுகவின் பதிலடி இதுதானா?

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு பல துயர சம்பவங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் கொரோனா என்ற ஓர் தொற்று ஆரம்பித்து மக்களை வாட்டி எடுத்தது.அதிலிருந்து மீண்டு வந்த மக்கள் தற்பொழுது விலைவாசியை கண்டு அதிர்ந்துள்ளனர்.அந்தவகையில்  சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிலிண்டர் எரிவாயுவின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து நிலையில்தான் உள்ளது. இந்நிலையில் பல அரசியல் கட்சிகள் விலையை குறைக்கும் படி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

மாவட்டம் பாஜக தலைவர் ஐயப்பன் இரு தினங்களுக்கு முன் பெட்ரோல் டீசல் விலை குறைக்கும் படி போராட்டம் நடத்தினார். அவர் போராட்டம் நடத்திய உடன் செய்தியாளர்களை கண்டு பேட்டி அளித்தார்.அவ்வாறு பேட்டி அளிக்கும் பொழுது தமிழக அரசுக்கு ஓர் மிரட்டல் கொடுக்கும் வகையில் ஊடகங்கள் முன்னிலையில் பேசினார்.பேட்டியில் பெட்ரோல் டீசலுக்கான வரியை தமிழ்நாடு அரசு குறைக்காவிடில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என கூறினார்.

அவ்வாறு அவர் கூறியது பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கியது.அவ்வாறு அவர் பேசியதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில் தற்பொழுது அவர் தமிழக அரசை மிரட்டும் நோக்கில் பேட்டி அளித்ததால் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.அதுமட்டுமின்றி தொடர்ந்து தமிழக பாஜக தலைமை திமுக அரசு சரிவர ஆட்சி நடத்துவதில்லை என தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

அந்தவகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று விவசாய நிலங்களில் அமையவுள்ள டிட்கோ தொழிற்பேட்டையை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்காக ஓர் பொதுகூட்டம்  நடத்தினார்.அதுமட்டுமின்றி மேலும் அக்கரை செங்கப்பள்ளி,குன்னி பாளையம்,வாக்கானாம் கொம்பு,ஆத்திக்குட்டை ஆகிய பகுதியில் உள்ள விவசாய மக்களை இல்லம் தேடி சென்று சந்தித்து பேசினார்.அதனையடுத்து ஆட்சிக்கு வந்த முதல் எந்த ஒரு நலத்திட்டத்தையும் செய்யாத தமிழ அரசு என மக்கள் முன்னிலையில் பேசினார்.அதனையடுத்து விவசாய பூமியான அன்னூர் பகுதியை கந்தக பூமியாக மாற்றவே தற்பொழுது டிட்கோ தொழிற்பேட்டை வர உள்ளது என குற்றம்சாட்டினர்.இதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் தான் தற்பொழுது பாஜக தலைவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அரசியல் சுற்றுவட்டாரங்கள் பேசி வருகின்றனர்.