Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதன்முதலாக ஒரு மாநிலத்தில் ஒரே நாளில் முதல்வர், சபாநாயகர், 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு..!! அதிர்ச்சி தகவல்!!

ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நோய் தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று நடந்த கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தன்னுடன் ஒரு வாரமாக தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், நேற்று காலை அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் கியன் சந்த் குப்தா மற்றும் 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mlkhattar/status/1297889527604719616?s=20

Exit mobile version