Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!!

The groom waited with various dreams on the first night!! Groom shocked by bride's gift!!

The groom waited with various dreams on the first night!! Groom shocked by bride's gift!!

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!!

முதலிரவில் அன்போடு காத்திருந்த மணமகனுக்கு மணமகள் கொடுத்த பரிசு அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவருக்கு திருமணத்திற்கு முன்பான உறவால் கர்ப்பமானார். ஆனால் அவரின் பெற்றோர் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக வேறு நல்ல சம்பாதனை உள்ள ஒரு மாப்பிள்ளையை தேடினர்.

அப்போது அவர்களுக்கு எதிர்பார்த்த படியே நொய்டாவை சேர்ந்த மணமகன் கிடைத்துள்ளார். பெண் பார்க்கும் படலத்தின் போது மணமகளின் வயிறு பெரிதாக இருந்ததை கேட்ட போது அறுவை சிகிச்சை காரணமாக பெரிதாகி விட்டதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய மணமகன் வீட்டார் திருமணதிற்கு நாள் குறித்து ஏற்பாடுகளை தடபுடலாக செய்தனர்.

திருமணம் முடிந்ததும் பெண்ணின் பெற்றோர் கிளம்பி விட்டனர். மாப்பிள்ளை வீட்டில் அன்று இரவு முதல் இரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு கனவுகளுடன் மணமகன் காத்திருந்தார். மணமகளும் வந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் வயிற்று வலியால் துடித்துள்ளார். அதிர்ச்சியடைந்த மணமகன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவே அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இது பிரசவ வலி என கூறியுள்ளனர்.

அதிர்ந்த மணமகன் பெண்ணின் வீட்டிற்கு தகவல் அளிக்க அவர்கள் வந்து சேர்ந்தனர். அங்கு அந்த பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் மகளின் வாழ்வு நன்றாக இருக்க இவ்வாறு செய்ததாக பெண் வீட்டார் கூறியுள்ளனர். ஆனால் மணமகன் வீட்டார் அந்த பெண்ணை ஏற்க மறுக்கவே அந்த பெண்ணை குழந்தையுடன் பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்ட மணமகன் வீட்டார் நொய்டா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

Exit mobile version