முதல்வர் கையில் ஓர் விருது! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுவே!
ஒவ்வொரு புது வருடம் வரும் போதும் மக்கள் பலவித பிரச்சனைகளை எதிர்நோக்கி தான் செல்கின்றனர்.அந்தவகையில் சுனாமி,புயல்,இதனையடுத்து தற்போது அனைத்து உலக நாடுகளிலும் ஒரே மாதிரியான தொற்று நோய் உருவாகியுள்ளது.இந்த கொரோனா தொற்று உருவாகிய காலம் முதல் மக்கள் பெருமளவு பாதிபிற்குள்ளாகி வருகின்றனர்.மேல் தட்ட மக்கள் எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் தங்களிடம் உள்ளதை வைத்து சமாளித்துக் கொள்கின்றனர்.அதுமட்டுமின்றி பாமர மக்களை காப்பாற்றவும் தன்னார்வளர்களும் தற்போது அதிகப்படியானோர் உள்ளனர்.
ஆனால் எந்தவித வேலைகளையும் செய்ய முடியாமல் தன்னம்பிக்கையை ஒன்றே வைத்துக்கொண்டு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருபவர்கள் தான் மாற்றுத்திறனாளிகள்.அவர்களுக்கு உதவி கோர சில மக்கள் மட்டுமே உள்ளனர்.அதேபோல அவர்களுக்கு உதவி செய்யும் நிறுவனங்களும் குறைந்தே காணப்படுகிறது.அந்த ஓர் சிலரை ஊக்குவிக்கும் விதத்தில் தான் தற்போது தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் அவர்கள் கூறியது,மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முதலமைச்சரிடமிருந்து நேரடியாக பரிசுகள் வழங்கப்படும்.இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் தேதியே கடைசி ஆகும்.அந்தவகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணிபுரிபவர்களின் விண்ணப்பங்களை ஓர் குழு அமைத்து தேர்ந்தெடுக்கப்படுவர்.அதனையடுத்து அவர்களுக்கு ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் அவர்கள் பரிசளிப்பார்.
அவர்களுக்கு வழங்கப்படும் பரிசு கீழ்க்கண்டவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது:
மாற்று திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம்,ரூ.25,000 ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை செய்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம்,ரூ50,000 ரொக்க பரிசு 10 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக மருத்துவம் அளித்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகப்படியாக வேலை அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த கூட்டறவு வங்கிக்கும் 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் https://awards.tn.gov.in என்ற இணையத்திலும் விண்ணப்பிக்கலாம்.இதை விண்ணப்பிக்க இம்மமாதம் 30-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் தந்துள்ளனர்.