முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்!

0
125
DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

முன்னாள் அமைச்சர்களை பழி வாங்குவதை விட்டு விடுங்கள்! திமுக-வுக்கு அறிவுரை கூறிய முன்னாள் முதல்வர்!

கடந்த அதிமுக ஆட்சியின் போது பல மோசடிகள் நடந்து வந்ததாக தற்போது கூறுகின்றனர்.அந்தவகையில் அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி வேலுமணி நியமிக்கப்பட்டார்.இவர் பலரிடம் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி இவர் தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

அந்தவகையில் சென்னை மற்றும் கோயம்பத்தூர் மாநகராட்சிகளில் ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு அளித்துள்ளதாக லஞ்சம் ஒழிப்புத்துறை கூறியுள்ளனர்.மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை கூறியது,சிஆர் கன்ஸ்ட்ரக்ஷன் 11 மடங்கு இதனால் வளர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.அதனால் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமான சென்னை மற்றும் கோயம்புத்தூரில் 55 இடங்களுக்கு மேல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.எஸ்.பி வேலுமணி வீட்டில் மட்டும் 15 லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.எஸ்.பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அந்த வழக்கில் ஒருவரான கேசிபி நிறுவனர் சந்திரபிரகாஷ் தற்பொழுது நெஞ்சுவலி என்று கூறி கோயம்பத்தூர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த 17 பேர் உள்ள பட்டியலில் கே.சி.பி நிறுவனர் பெயர் நான்காவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எஸ்.பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் வேளையில் மறுபக்கம் அதிமுக நிர்வாகிகள் அங்குள்ள போலீசாரிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அங்கு சற்று நேரம் பரப்பாக காணப்பட்டது.எங்களை பழிவாங்குவதற்கு நடத்தப்படும் சதி அதுமட்டுமின்றி வரும் உள்ளாட்சி தேர்தலில் எங்களை சோர்வடைய செய்வதற்கு திமுக நடத்தப்படும் செயல் என்று சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.அவரையடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் செயல்முறைகளில் ஈடுபட வேண்டாம் என கூறினார்.

மேலும் இந்த சோதனையே இன்றும் முடிவுக்கு வராத நிலையில் நேற்று புதுக்கோட்டை சென்ற சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது, மற்றொரு ரைடு தயாராகிகொள்ளுங்கள் என்பது போல இருந்தது.அவர் கூறியது,திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவ உபகரணங்கள் விலை பாதியளவு குறைந்துள்ளது.இதுவே அதிமுக ஆட்சியின் போது உச்சக்கட்ட விலையில் இருந்தது.அவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கியவர்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை விசாரணை செய்ய வேண்டும் என்றார்.