முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா!
முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளது. அவர் மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாதபோது அனுமதிக்கப்பட்ட திலிருந்து அவர் மரணம் வரை பல சர்ச்சைகள் எழுந்து வண்ணமாகவே இருக்கிறது. அது குறித்து இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது. அவ்வாறு ஜெயலலிதா அம்மாவின் மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா அம்மாவின் மரணம் குறித்து தொடர்ந்து அப்போலோவில் மருத்துவர்களை அழைத்து விசாரணை நடத்தி வந்தது. இதுகுறித்து அப்போலோ எங்களை மட்டும் விசாரணைக்கு தொடர்ந்து அழைத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு வைத்து வந்தனர். அதனால் அப்போலாம் ஆணையத்திடம் ஆஜராக முடியாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்தது. குறிப்பாக ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளை அப்போலோ மருத்துவமனை முன் வைத்தது. அதில் முதலாவதாக அவர்கள் கூறியதாவது, ஆறுமுகசாமி ஆணையம் ஒரு தலைபட்சமாக நடக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் மரணத்தின் பலர் சம்பந்தப்பட்ட பல தலைவர்களை விசாரிக்க இருக்கும் நிலையில் எங்களை மட்டும் தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கின்றனர். மேலும் அவர் விசாரணை நடத்தும் பொழுது நாங்கள் கொடுக்கும் தகவல்களை எல்லாம் ஆறுமுகசாமி ஆணையம் வெளியே தெரிவித்து விடுகின்றது. இதனால் எங்கள் மருத்துவமனையின் நற்பெயர் பாதிக்கப்படுகிறது. அதனால் இனி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராக முடியாது என்ற அடிப்படையில் தற்போது நீதிமன்றத்தை நாடி உள்ளோம் என்று கூறினர். அதுமட்டுமின்றி ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து பல விதி மீறல்களை நடத்துகிறது. எங்களுக்கு அதிக அளவு உத்தரவுகளையும் போடுகின்றனர்.
ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா அம்மாவின் மறைவின் உண்மையை கண்டறியும் குழுவாக செயல்பட வில்லை. ஆறுமுகசாமி ஆணையத்தில் எந்த ஒரு மருத்துவ வல்லுநர்களும் காணப்படவில்லை. அவ்வாறு இருக்கும் நிலையில் மருத்துவ ரீதியிலான விவரங்களை நாங்கள் எந்த அடிப்படையில் தெரிவிப்பது போன்ற தங்கள் கோரிக்கையை அப்போலோ நிர்வாகம் முன்வைத்தனர். நாங்கள் மருத்துவரீதியான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறோம். ஆறுமுகம் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினர்.
அதுமட்டுமின்றி ஜெயலலிதா அம்மாவின் சிகிச்சையின்போது சிசிடிவி கேமரா ஏன் பொருத்த பட வில்லை என்பதற்கும் விளக்கம் அளித்தனர். அந்தவகையில் அப்போலோ மருத்துவ நிர்வாகம் கூறியதாவது, அன்றிருந்த அரசு கூறியதால் நாங்கள் சிசிடிவி கேமராக்களை அகற்றினோம். அதுமட்டுமின்றி மேற்கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தனியுரிமை தேவைப்பட்டதால் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் கூறினர்.