Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முப்பதாயிரம் பேர் பணியாற்றும் செய்யாறு சிப்காட் – அலட்சியம் காட்டுறதா கம்பனி நிர்வாகம்?

முப்பதாயிரம் பேர் பணியாற்றும் செய்யாறு சிப்காட் – அலட்சியம் காட்டுறதா கம்பனி நிர்வாகம்?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்பேட்டையானது செஸ் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தொழிற்சாலையில் சுமார் முப்பாயிரத்தகற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலையின் இருப்பிடமானது செய்யாறில் இருந்து 15 கிலோமீட்டர் காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் என என மத்தியில் அமைந்துள்ளது.

இத்தொழிற்சாலையில் பணியாற்றும் கர்பினிப் பெண்கள் மற்றும் குழந்தையுடன் பணிக்கு வரும் பெண்களுக்கு மட்டும் தற்போது விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் செய்யாறு, காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை என முக்கிய நகரங்களில் இருந்தும் தொழிலாளர்கள் பணிக்கு வருகின்றனர்.

இந்த தொழிற்பேட்டையில் பணியாற்றும் ஊழியர்களிடையே கொரோனோ வைரஸ் தொற்று குறித்து பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்தள் வருவதால் யாருக்கேனும் கொரோனா தொற்று இருந்து அது நம்மையும் பாதிக்க கூடுமோ என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளதாக தெரிகிறது.

விடுமுறை விடுமா நிர்வாகம் என்று வாட்சப் குழுவில் செய்தி பரப்பியவரை தொழிற்சாலை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதும் குறிப்படத்தக்க விடயமாக உள்ளது. பணியாளர்கள் உள்ளே செல்லும் போது அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மாமீட்டர் சோதனை மட்டுமே செய்யப்படுவதாக தெரிகிறது.

இது மட்டுமே நிச்சயம் போதாது என்றும் வைரஸ் தொற்று நடவடிக்கையை தொழிற்சாலை நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் முடிந்தவரை தொழிற்சாலைக்கு விடுப்பு அளித்தால் ஊழியர்கள் தங்களை தனிமைப் படுத்திக்கொண்டு மிகவும் பாதுகாப்பாகவும் அச்சமின்றியும் இருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

Exit mobile version