Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராகுல்காந்தி டிவிட்டர் கணக்கு முடக்கம்!

Rahul Gandhi

Rahul Gandhi

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, ஆளும்  பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும், கருத்து மோதல்களையும் ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக தற்போது பெகாசஸ் விவகாரத்தை அனைத்து எதிர்க்கட்சி பிரிதிநிதிகளுடன் பேசி, நாடாளுமன்றத்தில் திரம்பட எடுத்துச் சென்று, நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்துள்ளார்.

அதே நேரத்தில், டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தனது தலைமையில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் சென்று ஆதரவு தெரிவித்து, மத்திய அரசுக்கு பெரும் தொந்தரவை கொடுத்து வருகிறார்.

இது ஒருபுறம் இருந்தாலும், டிவிட்டர் மூலம் பல்வேறு கேள்விக்கனைகளை அரசுக்கு எதிராக தொடுத்து வருகிறார். பெகாசஸ் விவகாரத்தில், பெகாசஸ் சாஃப்ட்வேரை இந்தியா வாங்கியதா? இல்லையா? என்பதை மட்டும் தனக்கு பதிலளிக்க வேண்டும் என அவர் கேட்டது,, தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இப்படி டிவிட்டரில் தொடர்ந்து தீவிரமாக இருந்து வரும் ராகுல் காந்தியின் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமை, சோசியல் மீடியாவில் தொடர்ந்து அவர் மக்களுக்காள குரல் கொடுப்பார் என்றும், அவர்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து சண்டையிடுவார் என்றும் கூறியுள்ளது.

டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. தவறுதலாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடந்ததா? என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் டிவிட்டர் கணக்கில் இருந்து புளு வெரிஃபைடு டிக் நீக்கப்பட்டது. ரசிகர்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, மீண்டும் அவருக்கு புளு டிக் வழங்கப்பட்டது.

Exit mobile version