‘ரியல் ஹீரோ’ எப்பவுமே ‘அப்பா’ தான்! மகனுக்காக செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

0
91

உடம்பு சரியில்லாத தனது மகனுக்காக மருந்து வாங்க 300 கிலோ மீட்டர் தூரம் சென்று சைக்கிளில் பயணம் செய்து மருந்து வாங்கி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே கணிகன கோப்பலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஒரு கட்டட தொழிலாளி. கொரோனா காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்த பிறகு தனது பத்து வயது மகன் நரம்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். மைசூரில் சிகிச்சை பெற்று குணமாகாத நிலையிலும் பெங்களூரில் உள்ள மனநலம் மற்றும் நரம்பியல் கழகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும். ஒரு நாள் கூட தவறாமல் மாத்திரை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவன் 18 வயது அடையும் வரை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் கால்-கை வலிப்பு வரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்தது. தொடர்ந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள் அடைப்பு போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் தன் மகனை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறார் ஆனந்த்.

நாள் தவறாமல் மருந்து சாப்பிட வேண்டும் என்ற சூழலில் இருக்கும் தன் மகனை காப்பாற்ற சைக்கிளிலேயே பெங்களூருக்கு செல்ல முடிவு எடுத்துள்ளார்.

கிராமத்தில் இருந்து சைக்கிளில் வந்த ஆனந்த் மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். அவரது செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவரது மகனின் நோய்க்கு மருந்து களையும் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பினர்.

அதைப் பெற்றுக் கொண்ட ஆனந்த் அவரது அடுத்த இரண்டு நாட்கள் கழித்து வீடுவந்து சேர்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எவ்வளவு அலைந்து திரிந்தும் சுற்றுவட்டார பகுதிகளில் அலைந்தும் மகனுக்கு தேவையான மருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் கூட சாப்பிடாமல் இருக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் பெங்களூருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு சைக்கிளில் சென்று வர முடிவு செய்தேன். எனக் கூறினார்.