மழைக்காலங்களில் மட்டுமின்றி வெயில் காலங்களிலும் கொசுக்கள் பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இதனால் டெங்கு,மலேரியா போன்ற உயிரை பறிக்கும் நோய் பாதிப்புகள் அதிகளவு பரவுகிறது.
இதை கட்டுப்படுத்த இரசாயனங்கள் நிறைந்த கொசு விரட்டியை பயன்படுத்தாமல் வாழைப்பழத் தோலை மட்டும் வைத்து வீட்டில் பதுங்கி இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை நொடியில் விரட்டலாம்.
தீர்வு 01:
1)வாழைபழத் தோல்
2)தண்ணீர்
ஒரு வாழைபழத் தோலை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு 100 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை கொசுக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் தெளித்துவிடுங்கள்.இப்படி செய்தால் வீட்டில் ஒரு கொசு கூட இருக்காது.
தீர்வு 02:
1)வாழைபழத் தோல்
முதலில் வீட்டில் கொசு நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் தேர்வு செய்யுங்கள்.பிறகு ஒரு வாழைப்பழத் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொசு நடமாட்டம் உள்ள இடத்தில் வையுங்கள்.இப்படி செய்தால் கொசுக்கள் நடமாட்டம் குறையும்.
தீர்வு 03:
1)காய்ந்த வாழைப்பழத் தோல்
நீங்கள் கடையில் விற்கும் இரசாயன கொசு விரட்டியை தவிர்த்துவிட்டு வாழைபழத் தோலை எரித்து புகை மூட்டினால் கொசுக்கள் தொல்லை நீங்கும்.
அதற்கு முதலில் ஒரு வாழைபழத் தோலை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த வாழைப்பழத் தோலை ஒரு தட்டில் வைத்து பற்ற வைக்கவும்.இப்படி செய்தால் புகை அதிகமாகும்.
இந்த வாழைபழத் தோல் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது என்பதால் அவை உடனடியாக வீட்டை விட்டு ஓடிவிடும்.