விரைவில் நடிகர் கவினுக்கு டும் டும் டும்… இவர்தான் மணப் பெண்ணா…
நடிகர் கவின் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் பரவி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர் கவின் நட்புனா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை.
இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலம் அடைந்தார். அதன் பிறகு லிப்ட் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.
லிப்ட் திரைப்படத்திற்கு பிறகு இந்த வருடம் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் டாடா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மூலமாக நடிகர் கவின் அவர்கள் மேலும் பிரபலமடைந்தார். நடிகர் கவின் தற்பொழுது நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கவின் அவர்களின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கவின் அவர்கள் அவருடைய காதலியான மோனிகா அவர்களை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கவின்-மோனிகா திருமணம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.