Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஷ்ணுவை தவிர யாராலும் வெல்ல முடியாத விதுரரின் வில்! மகாபாரத சூழ்ச்சி!

#image_title

நெறியிலும், அனைத்து நெறியை எடுத்துக் கூறுவதிலும் இதுதான் அறம், இப்படி தான் நடக்க வேண்டும் என்பதை கூறுவதிலும் விதுரருக்கு இணை யாரும் இல்லையாம். அப்படி விதுரரிடம் உள்ள வில்லை உடைக்க கிருஷ்ணன் செய்த சூழ்ச்சி தான் இந்த கதை.

 

முன்ஜென்மத்தில் எமதர்மராஜா அவர்கள் நெறி தவறி நடந்து கொண்டதால் முனிவரின் சாபத்தால் அஸ்தினாபுரத்தின் பணி பெண்ணிற்கு மகனாகப் பிறந்தார். அந்த முனிவர் எமதர்மராஜாவிற்கு அழைத்த சாபம் என்னவென்றால் அடுத்த பிறவியில் நீ மனிதப் பிறவியாக பிறப்பாய். நீ எடுத்துரைக்கும் நெறிமுறைகளையும் அறங்களையும் அத்தனை பேர் கொண்ட கூட்டம் கேட்காது. எல்லாராலும் அவமான ப்படுவாய் என்ற சாபம் அவருக்கு கொடுக்கப்பட்டது.

 

இப்படி பணிப்பெண்ணான பரிட்சியை அவருக்கு பிறந்தவர் தான் விதுரர். அப்படி பிறந்த  விதுரரின் வீரத்திற்கு ஈடு இணையே கிடையாது. அப்படி விதுரர் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து ஒரு வில்லை பெற்றார். அந்த வில் சிவன் மற்றும் மகாவிஷ்ணுவை தவிர வேறு யாராலும் தோற்கடிக்க இயலாது.

 

இதை நன்றாக புரிந்து கொண்ட கிருஷ்ணன் விதுரரை இந்த மகாபாரதத்தில் கலந்து கொள்ளா விடாமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தூதுவனாக அஸ்தினாபுரத்திற்கு செல்கிறார்.

 

அப்படி அஸ்தினாபுரத்திற்கு தூதுவனாக சென்று தனது பக்கம் உள்ள பாண்டவர்களுக்கு நியாயம் வழங்குமாறு கேட்கிறார். திருதராஷ்டிரன் மற்றும் துரியோதனனும் முதலில் அமர்ந்து சாப்பிடுங்கள் என்று சொல்கிறார்கள்.

 

கிருஷ்ணன் நானோ பாண்டவர்களின் உதவியாளன் தூதுவன், எப்படி எதிரி வீட்டில் நான் உண்பது என்று நேரடியாக விதுரரின் மாளிகைக்குச் சென்று அவர்களிடம் அமர்ந்து உணவு உண்ணுகிறார். அதைப் பார்த்த துரியோதனனுக்கு ஏகப்பட்ட கோபம் வந்து விடுகிறது.

 

மேலும் உணவு உண்ட பிறகு அஸ்தினாபுரத்தில் அரண்மனையில் அரசரிடமும் துரியோதனனிடமும் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு ஐந்து நாடுகள் வேண்டாம் ஐந்து கிராமங்களாவது தாருங்கள் என்று கேட்கிறார்.

 

ஆனால் துரியோதனனும் 5 குண்டு மணி கூட தர முடியாது என்று சொல்கிறான். விதுரரின் மாளிகையில் உணவு உண்ட கிருஷ்ணனின் மேல் கோபப்பட்டு கிருஷ்ணனையும் கைது செய்யுமாறு சொல்கிறான்.

 

அறம் தவறி நடக்கும் துரியோதனனை பார்த்து விதுரர் இது சரியல்ல! இவர் தூதுவன். இவரை நாம் எதுவும் செய்யக்கூடாது என்று சொல்கிறார்.

 

அதற்கு மிகவும் கோபமடைந்த துரியோதனன் நீ ஒரு பணி பெண்ணின் மகன். நீ எனக்கு அறத்தை சொல்லும் தகுதி உனக்கு இல்லை, என்று அனைவரும் முன்னிலையும் தனது தாயை பற்றி பேசி விதுரரை அவமானம் செய்கிறார் துரியோதனன்.

 

தாயை இழிவாகப் பேசியதால் கோபம் உற்ற விதுரர் தனது வில்லை எடுத்து துரியோதனன் மேல் தொடுக்க ஆரம்பிக்கிறார்.

 

கிருஷ்ணன் துரியோதனா நீ வழி தவறி பேசாதே! விதுரர் கோபப்பட்டால் அவர் அம்புகள் உன்னை தொடுத்தால் நீ சாம்பலாகி விடுவாய் என சொல்கிறார்.

 

பிறகு சுய நினைவுக்கு வந்த விதுரர் தனது வில்லை உடைத்து விடுகிறார். இவ்வில் இருந்தால்தானே உனக்கு ஆதரவாக நீ என்னை போர் புரிய செய்வாய். இந்த வில் இனிமேல் உனக்கு பயன்படாது. இந்தப் போரிலும் நான் கலந்து கொள்ள போவதில்லை என சொல்கிறார் விதுரர்.

 

வந்த வேலை எப்படியோ முடிந்தது என கிருஷ்ணன் மனதிற்குள் என்னை அங்கிருந்து புறப்படுகிறார். துரியோதனன் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது கிருஷ்ணனிடம் நான் விதுரரை போர் புரிய வைத்திருந்தால் என்ன செய்திருப்பாய் என்ற கேள்விக்கு கூட கிருஷ்ணன், நானே இறங்கி போர் புரிந்திருப்பேன் என்று பதிலை தான் கிருஷ்ணர் கூறியிருப்பார். ஏனென்றால் அந்த  விதுரர் இறங்கி போரிட்டால் அவரை வெல்ல அந்த மகாவிஷ்ணு சிவனை தவிர வேற யாரும் இல்லை என்பதே பொருள்.

Exit mobile version