வீட்ல கேஸ் லீக் ஆகுதா? பயப்பட வேண்டாம் உடனே இதை செய்யுங்க!

0
152

கேஸ் என்றாலே பிரச்சினைதான். இரவு நேரங்களில் ரெகுலேட்டரை ஆஃப் செய்யாமல் படுத்து விட்டோம் என்றால் கேஸ் லீக் ஆகிறதா? என்று தெரியாமல் இருக்கும். அதனால் மறக்காமல் ஒவ்வொரு முறை சமையல் செய்யும் பொழுதும் கேஸ் சிலிண்டரை ஆப் செய்து விடுங்கள்.

 

வீட்டில் பெரியவர்கள் மட்டும் இருந்தார்கள் என்றால் அவர்கள் அந்த காலத்தில் இருந்த அடுப்பை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்களுக்கு கேஸ் ஆன் செய்வது எப்படி? லீக் ஆகிறதா? என்று கூட தெரியாத அளவிற்கு இருக்கும். அதனால் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

 

உங்கள் கேஸ் ரெகுலேட்டர் சிலிண்டர் ஏதாவது பிரச்சனை இருந்தால் அருகில் உள்ள டீலர்களை நீங்கள் தொடர்பு கொண்டு அதை மாற்றிக் கொள்ளலாம்.

 

இப்பொழுது திடீரென்று கேஸ் தீப்பிடித்து விட்டால் எப்படி தற்காத்துக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

 

1. கேஸ் சிலிண்டர் ரெகுலெட்டர் உடன் இணைந்து இருக்கும் டியூப் இருக்கிறது அல்லவா அது தீப்பிடித்து எறிந்தால் என்ன செய்யலாம்.

2. பயப்படாதீர்கள் உங்கள் கட்டைவிரல் இருக்கிறதல்லவா, அந்த கட்டைவிரலை டியூப் தீ வரும்பகுதியில் வைத்து சட்டென்று அழுதினால் தீப்பிடிப்பது நின்று விடும். உடனே சிலிண்டரின் ரெகுலேட்டரை ஆஃப் செய்து விடுங்கள்.

3. இல்லை கட்டை விரலை கொண்டு அழுத்துவது உங்களுக்கு பயமாக இருக்கிறது என்றால், டியூபில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் பொழுது. டியூபை ஒரு ஓரமாக எடுத்து நடுப்பகுதியில் மடக்கி விடவும், அப்பொழுது கேஸ் வெளியாவது நின்றுவிடும், தீப்பிடிப்பதும் நின்று விடும். இப்பொழுது நீங்கள் ரெகுலேட்டரை ஆப் செய்து விடுங்கள்.

4. இப்பொழுது கேஸ் ரெகுலேட்டரில் உள்ள பகுதி தீப்பிடித்து எரிகிறது என்றால் என்ன செய்யலாம்.

5. ஒன்றுமில்லை உங்கள் வீட்டில் பிளாஸ்டிக் பக்கெட் இருக்கும் என்றால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். தீப்பிடித்து எரியும் பொழுது கேஸ் சிலிண்டர் மீது அந்த பிளாஸ்டிக் பாக்கெட் கவிழ்த்து விடுங்கள். உடனடியாக கேஸ் வெளியாகி தீப்பிடிப்பது நின்றுவிடும், உடனே ரெகுலேட்டரை ஆப் செய்து விடுங்கள்.

6. மற்றொரு முறை என்னவென்றால் கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் பொழுது உங்கள் வீட்டில் போர்வை இருக்கும் அல்லவா! அந்த போர்வையை நனைத்து உடனடியாக சிலிண்டர் மீது போர்த்தி விட்டால் கேஸ் வெளியாகி தீப்பிடிப்பது நின்றுவிடும். உடனே ரெகுலேட்டரை ஆஃப் செய்து விடுங்கள்.

7. கேஸ் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் பொழுது வெடிக்காது. வெளியில் உள்ள பகுதியும் எரிந்து கேஸ் முழுவதும் வெளியாகி சிலிண்டர் முழுவது பற்றி எரிந்து வெப்பம் அதிகமாகி வெடிக்கிறது.

8. அதனால் இந்த மாதிரியான எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும் பொழுது பயப்படாமல் துணிந்து இந்த வழிமுறைகளை பின்பற்றி தற்காத்துக் கொள்ளுங்கள்.