வைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!?

0
142
#image_title

வைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!?

நம் உடலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி சத்துக்கள் குறைந்தால் என்ன நடக்கும் என்பது பற்றியும் இந்த மூன்று விதமான முக்கியமான ஊட்டச் சத்துக்களை எவ்வாறு அதிகரிப்பது அது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் நமது உடலுக்கு நன்மைகளை தருகின்றதா அல்லது தீமைகளை தருகின்றதா என்பதை அறியாமல் நாம் சாப்பிட்டு வருகிறோம். நாம் உண்ணும் உணவின் மூலமாக நமக்கு நல்ல சத்துக்களும் கிடைக்கும். அதே போல உடலுக்குத் தேவையில்லாத கெட்ட சத்துக்களும் கிடைக்கும்.

நமது உடலில் அதிகமாக இருக்க வேண்டிய முக்கியமான மூன்று சத்துக்கள் என்ன என்றால் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நமது உடலில் அதிகம் இருக்க வேண்டும். இதில் எது குறைந்தாலும் அல்லது இல்லை என்றாலும் நமது உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

இந்த பதிவின் மூலமாக இந்த வைட்டமின் சத்துக்கள் நமது உடலில் குறைந்தால் என்ன நடக்கும் இதை அதிகரிக்க என்ன வழி என்பது பற்றி அனைத்தையும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

மூன்று வைட்டமின்களும் நமது உடலுக்கு நன்மைகள்…

* வைட்டமின் ஏ சத்து நமது பார்வையை அதிகரித்துக் கொடுக்கின்றது. மேலும் கண். தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கின்றது.

* வைட்டமின் பி சத்து நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றது. மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பார்த்துக் கொள்கின்றது.

* வைட்டமின் சி சத்துக்கள் நமது மனதிற்கு நல்ல அமைதியை தருகின்றது. மேலும் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.

மூன்று சத்துக்கள் குறைந்தால் என்ன நடக்கும்…

வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உடலில் குறைந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

* வைட்டமின் ஏ சத்து நமது உடலில் குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கண் பார்வை மங்கி குறையத் தொடங்கும்.

* வைட்டமின் பி சத்து நமது உடலில் குறைந்தால் வாயில் புண் ஏற்படும். இதய பாதிப்புகள் ஏற்படக்கூடும். வயிறு மந்தமாக காணப்படும். பக்கவாதம் ஏற்படும். அஜிரணக் கோளாறு ஏற்படும். ரத்த சோகை ஏற்படும்.

* வைட்டமின் சி உடலில் குறைந்தால் எலும்புகளின் பலம் குறையத் தொடங்கும். பற்களின் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு பற்கள் ஆட்டம் காணும். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். மன அமைதி பாதிக்கும். முகம் சிடு சிடுவென்று காணப்படும்.

வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகியவற்றை அதிகரிக்கும் உணவுகள்…

* வைட்டமின் ஏ சத்தை நமது உடலில் அதிகரிக்க செய்ய முருங்கைக் கீரை, பச்சை காய்கறிகள், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், மீன் எண்ணெய், ஈரல் ஆகியவற்றை சாப்பிடலாம்.

* வைட்டமின் பி சத்து அதிகரிக்க கைக்குத்தல் அரிசி, முட்டை, இறைச்சி, ஆகியவற்றை சாப்பிடலாம்

* வைட்டமின் சி சத்தை அதிகரிக்க ஆரஞ்சுப்பழம், திராட்சை, பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், தக்காளி, எலுமிச்சை, உருளைக்கிழங்கு, கொய்யா, பப்பாளி, வெற்றிலை ஆகியவற்றை சாப்பிடலாம்.