ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்!
நான்கு மாதங்களுக்கு முன்புதான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் சரமாரியாக போட்டியிட்டனர்.மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பல அறிக்கைகளை குவித்தனர்.ஆனால் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக 10 ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியதால் நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல நல திட்டங்களை செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார்.தற்பொழுது அதனையடுத்துசெப்டம்பர் 13-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இந்தத் தேர்தலில் திமுக சார்பாக யார் போட்டியிடப் போகிறார் என்று பெரும் கேள்வி எழுந்தது.
அதனை உடைக்கும் விதமாக தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவரான மு .க ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர், திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அணியின் இணை செயலாளராக இருக்கும் எம்.எம் அப்துல்லா இவர் மாநிலங்களவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக போட்டியிடப் போகிறார் என கூறியுள்ளார்.தமிழக பட்ஜெட் தாக்குதலானது தற்பொழுது நடைபெற்று வரும் வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டமானது செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என முதலில் கூறினார்.ஆனால் தற்போது மாநிலங்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அந்தக் கூட்டத்தின் கால அவகாசத்தை தற்பொழுது குறைத்துக் கொண்டனர்.
தமிழகத்தில் தற்பொழுது 3 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. அதில் ஒரு இடத்திற்கு தற்பொழுது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாநிலங்களவை தேர்தலானது செப்டம்பர் 13-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. அதனையடுத்து மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என கூறியுள்ளனர்.எம்.எம் அப்துல்லா புதுக்கோட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.