ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ!
கொரோனா தொற்றின் இந்த 2-ம் அலையில் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.மக்கள் நலன் கருதி அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர்.அதனைத்தொடர்ந்து சிலர் அரசாங்கத்தின் விதிகளை மீறி வெளியே செல்கின்றனர்.அவர்களை தடுக்கும் விதத்தில் போலீசார் பல முறைகளில் விழிப்புணர்வு செய்தும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.
அதனைத்தொடர்ந்து கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களை எச்சரிக்கும் விதத்தில் குக்கூ குக்கூ என்ற சினிமா பாடலுக்கு நடனம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி அந்த விழிப்புணர்வு நடன வீடியோவானது பொதுமக்களிடையே பெருமளவு வரவேற்ப்பை பெற்றது.அதனைத்தொடர்ந்து தற்போது நமது தமிழக போலீசார் கேரளா நபர் ஒருவருக்கு உதவி செய்து மாஸ் காட்டியுள்ளார்.கூடலூர் கேரளா எல்லையான கீழ்நாடு பக்கத்தில் இரண்டாவது வளைவில் மினி லாரி ஒன்று கட்டுப்பாட்டை மீறி கவிழ்ந்து விழுந்தது.
இந்த லாரி கவிழ்ந்ததில் அந்த ஓட்டுனர் சுயநினைவின்றி சாலையில் விழுந்து கிடந்தார்.தற்பொழுது ஊரடங்கு அமல்படுத்தி இருப்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை.அந்த பகுதியில் அதிகப்படியாக சரக்கு வாகனங்கள் மட்டுமே செல்கிறது.அங்கு மயங்கி விழுந்த ஓட்டுனரை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நீலகிரி மாவட்டம் கியூ பிரிவு போலீசார் சத்தியமூர்த்தி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் மறக்காயி ஆகியோர் அந்த ஓட்டுனருக்கு முதலுதவி செய்தனர்.
இவர்கள் முதலுதவி அளித்த ஓரிரு நிமிடங்களிலேயே அந்த ஓட்டுனர் கண் முளித்தார்.இவர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி அந்த போலீசார் முதலுதவி செய்யும் வீடியோவானது பலரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.மயங்கி விழுந்த ஓட்டுனர் பாலக்காடு மாவட்டம் பொலியாம்பாறை பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.