இந்த 1 சொட்டு எண்ணெய் போதும்! உடலில் எந்த வலியானாலும் பறந்து போகும்
நமக்கு கழுத்து வலி மட்டுமல்ல. கால் வலி, கை வலி, குதிகால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, முதுகு வலி இருக்கும். இதனால் தினமும் நாம் பல வேதனைகளை சந்தித்துக் கொண்டிருப்போம். இதை எப்படி சரி செய்வது என்று நிறைய வைத்தியங்களையும், மாத்திரைகளையும், மருந்துகளையும் நீங்கள் எடுத்தும் பயனில்லாமல் போயிருக்கும். அதற்கான ஒரே தீர்வாக இந்த ஆயுர்வேதிக் ஆயிலை தயார் செய்து பயன்படுத்தினால் போதும். அந்த ஆயுர்வேதிக் ஆயிலை எப்படி தயார் செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆயுர்வேதிக் ஆயில் தயார் செய்ய தேவையான பொருள்கள்
பழைய பூண்டு – பெரிது 1
ஓமம் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு எண்ணெய் – 50 மிலி
செய்முறை:
முதலில் வாணலியில் எடுத்து வைத்துள்ள கடுகு எண்ணெய் 50மிலி-யை ஊற்றிக் கொள்ளவும். பிறகு அந்த பெரிய பூண்டை சிறு சிறு பல்லாக தோலை உரித்து அதை வாணலியில் இருக்கும் கடுகு எண்ணெயில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துள்ள ஓமத்தையும் அதனுடன் சேர்த்து காய்ச்ச வேண்டும்.
வெள்ளை பூண்டு தங்க நிறத்தில் வரும் வரை காய்ச்சினால் போதும். வெள்ளைப் பூண்டை கருப்பு நிறம் வரும் வரை காய்ச்சக் கூடாது. பிறகு அதை ஆற வைக்க வேண்டும்.
எண்ணெய் ஆறிய பின்னர் அதை ஒரு ஜாரில் அல்லது பாட்டிலில் ஊற்றி எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முன்பு இந்த எண்ணெய்யை லேசாக நம் உடலின் தோல் தாங்கும் அளவிற்கு சூடாக்கி வலி உள்ள பக்கம் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதை இரவு தூங்கும் முன்பு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.