Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேற இதை 1 கிளாஸ் குடித்தால் போதுமானது!!

#image_title

உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேற இதை 1 கிளாஸ் குடித்தால் போதுமானது!!

வாயுத் தொல்லை என்பது மிகவும் மோசமான பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த வாயுத் தொல்லை பாதிப்பு ஏற்பட்ட நபர் பொது வெளியில் நடமாடுவது மிகவும் கஷ்டம். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் இது போன்ற பாதிப்புகள் நம்மை அண்டாமல் இருக்கும்.

உடலில் கெட்ட வாயு இருப்பதற்கான அறிகுறி:-

*சாப்பிட்ட உடன் வயிறு வீக்கம் மற்றும் உப்பசம் ஆகுதல்

*தொடர்ந்து ஏப்பம் வருதல்

*ஆசன வாய் வழியாக தொடர்ந்து வாயு வெளியேறுதல்

வாயுத் தொல்லை ஏற்படக் காரணங்கள்:-

*எளிதில் செரிக்காத உணவை எடுத்துக் கொள்ளுதல்

*மலத்தை அடக்கி வைப்பது

*அதிக காரம் நிறைந்த உணவை உண்ணுதல்

*துரித உணவை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல்

*மன அழுத்தம்

வாயுத் தொல்லையை சரி செய்ய எளிய வழி இதோ:-

தேவையான பொருட்கள்:-

*ஓமம்

*சீரகம்

*மோர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி ஓமத்தை சேர்த்து மிதமான தீயில் கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். இதை இ கிளாஸ் மோரில் கலந்து பருகவும். இவ்வாறு செய்தால் உடலில் தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும்.

Exit mobile version