சிறுநீரகத்தில் உள்ள அனைத்து கற்களும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் கட்டாயம் பருக வேண்டும்!!
நம் உடலின் முக்கிய உள் உறுப்பான சிறுநீரகம்(கிட்னி) நச்சுக் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவுகிறது. இந்த உறுப்பில் கற்கள் உருவானால் அவை ஆரோக்கியத்தை இழந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும்.
சிறுநீரக கல்லின் வகைகள்:-
மும்மைக் கற்கள், சிஸ்டீன் கற்கள், யூரிக் அமிலக் கற்கள், சல்பேட் கற்கள்.
சிறுநீரக கல் உருவாக காரணங்கள்:-
மரபு வழி, உணவு முறை, தேவையான தண்ணீர் அருந்தாமை, சிறுநீரில் அதிக கால்சியம் இருத்தல், சிறுநீரில் அதிகமான யூரிக் அமிலம் இருத்தல், சிறுநீரகத்தில் சிட்ரேட் குறைவாக இருத்தல்.
சிறுநீரகக் கல் அறிகுறிகள்:-
சிறுநீரில் கல் வெளியேறுதல், சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் அதிகப்படியாக நுரைத்து வெளியேறுதல்.
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு
*தேன்
*சின்ன வெங்காயம்
*மிளகு
செய்முறை…
ஒரு பவுலில் 1 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு உரலில் 10 மிளகு சேர்த்து இடித்து தூள் செய்து கொள்ளவும். இதை தேன் கலவையில் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்ததாக 1 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். இதை தேன் கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு 200 மில்லி அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்து பருகவும். இதை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இவ்வாறு தினமும் பருகி வந்தோம் என்றால் கிட்னியில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.