பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!!
ஆந்திரா மாநிலத்தில் பெண் குழந்தையை 1 லட்சம் ரூபாய் என்றும் ஆண் குழந்தையை 1½ லட்சம் ரூபாய் என்றும் விற்பனை செய்ய முயன்ற தாய் உள்பட நான்கு பெண்களை காவல் துறையினர் அதிரடியாக கதை செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கோசங்கி தேவி குடும்ப வறுமையால் தவித்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான கோசங்கி தேவி குடும்ப வறுமை காரணமாக தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை விற்பனை செய்வதற்கு முடிவு எடுத்துள்ளார்.
இதையடுத்து அம்பேத்கர் காலனியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கோசங்கி தேவி அங்கு பணிபுரியும் ஜெயாவை சந்தித்தார். பின்னர் அவரிடம் தனக்கு குடும்ப வறுமை உள்ளது. குடும்ப வறுமை காரணமாக தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை விற்கப் போகிறேன் என்று கூறினார்.
பின்னர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் ஜெயா அவர்கள் கோசங்கி தேவியிடம் ஆட்டோ நகரை சேர்ந்த ஷாபனா பேகம், அமீனா பேகம் என்ற இரண்டு பெண்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து கோசங்கி தேவி ஷாபனா பேகம் மற்றும் அமீனா பேகம் இருவரிடமும் தனித்தனியாக முன்பணமாக 5000 ரூபாய் பெற்றுக் கொண்டார்.
பின்னர் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் 1.50 லட்சம் ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 1 லட்சம் ரூபாயும் தர வேண்டும் என்று கோசங்கி தேவி இரண்டு பெண்களிடமும் பேரம் பேசியுள்ளார். இதையடுத்து செப்டம்பர் 4ம் தேதி கோசங்கி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கோசங்கி தேவிக்கு குழந்தை பிறந்ததை அறிந்து மருத்துவமனைக்கு ஆரம்ப சுகாதார பணியாளர் ஜெயா விரைந்து வந்தார். பின்னர் கோசங்கி தேவியிடம் பணியாளர் ஜெயா வாக்குவாதம் செய்ய தொடங்கினார். அதாவது எனக்கு தெரியாமல் எப்படி இருவரிடமும் நீ எப்படி பணம் வாங்கலாம் என்று வாக்குவாதம் செய்தார்.
வாக்குவாதம் முற்ற ஜெயா மற்றும் கோசங்கி தேவி இருவரும் சண்டையிட்டனர். இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோவா பதிவு செய்து காவல் துறையினருக்கு அனுப்பி வைத்தார். இதை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாக்குவாதம் நடத்திய ஜெயா, கோசங்கி தேவி இருவரையும் கைது செய்தனர். மேலும் முன்பணம் கொடுத்த ஷாபனா பேகம், அமீனா பேகம் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.