10 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பா? அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்!
கொரனோ தொற்றானது 2 ஆண்டு காலமாக மக்கள் பெருமளவு பாதித்து வருகிறது. தற்பொழுது வரை மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இரண்டு ஆண்டு காலமாக 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெறாமல் இருந்தது. மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்கு சென்றனர். இவ்வாறு இருக்கையில் இம்முறை கொரோனா தொற்றானது அதிக அளவில் தீவிரம் காட்டி வந்தது. இதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.
இவ்வாறு இருக்கையில் மீண்டும் இவ்வாண்டு பொதுத்தேர்வு நடக்காது என்று மாணவர்கள் எண்ணி வந்தனர். அவர்களின் எண்ணம் சிதையும் வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இம்முறை கட்டாயம் பொது தேர்வு நடக்கும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அதுமட்டுமின்றி பள்ளி திறந்த இரு மாதங்களிலேயே 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் பொது தேர்வு நடக்க உள்ளது.
ஆனால் அதற்கான கால அட்டவணை இன்று வரை வெளியிட படவில்லை. தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடாத காரணத்தினால் இம்முறை கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறாது என்று பலர் வதந்திகளை பரப்பி வந்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, கட்டாயம் இம்முறை பொதுத் தேர்வு நடைபெறும். இதற்கான கால அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.இவர் இவ்வாறு கூறியதனால் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான கால அட்டவணை நாளை வெளியிடப்பட்டவுடன் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வைக்க வாய்ப்புகள் உள்ளதாக பள்ளி சுற்று வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.