10 கோடி கொரோனா தடுப்பூசி! இந்தியா ரஷ்யா புதிய ஒப்பந்தம்!

0
136

2019 ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாநகரத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்ற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகத்தில் உள்ள பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டிருப்பதாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்திற்கு விற்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவின் கமெலியா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய நேரடி நிதி முதலீடு (ஆர்டிஐ எஃப்) இணைந்து உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டனர்.

குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதன் பாதுகாப்பு தன்மை குறித்து பல்வேறு நாடுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.அச்சமயம் ஸ்புட்னிக்-வின் முதல் தொகுப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் விட பட்டுள்ளதாகவும் ரஷ்ய சுகாதாரத்துறை கடந்த எட்டாம் தேதி அறிவித்தது.

இத்தடுப்பூசியை குறித்து இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக ரஷ்யாவின் ஆர்டிஐ எஃப் தெரிவித்திருந்தது.மேலும் ஆடி ஐ எஃப் தலைமை அதிகாரி கிரில்  டிமிட்ரி  ஈமெயில் பேட்டி அளித்தார்.

இதில் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்படும் டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்திற்கு 10 கோடி தடுப்பூசியை விற்க ரஷ்யா ஆர்டிஐ எஃப் மூலம் ஒப்பந்தம் செய்துள்ளது என்று கூறினார். இத்தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இந்தியா,சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட்ட பல நாடுகளுக்கு தடுப்பூசி குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இது தொடர்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.