சீன அரசானது 10 நாட்கள் விசா இல்லாமல் தங்களுடைய நாட்டை சுற்றி பார்க்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லா பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக 54 நாடுகளுக்கு மட்டுமே இந்த விசா இல்லா பயணத்திட்டம் செல்லுபடி ஆகும் என்றும் சீனா அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாடுகள் பின்வருமாறு :-
அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், சீனாவின் 60 சர்வதேச துறைமுகங்களில் ஒன்றின் வழியாக செல்லும்போது இப்போது நாட்டின் சில பகுதிகளில் 10 நாட்கள் வரை தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
நேற்று டிசம்பர் 17ஆம் தேதி அன்று இத்திட்டமானது சீனாவின் தேசிய குடிவரவு நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10 நாட்கள் விசா இல்லாத பயணத் திட்டத்தின் முக்கிய வழிமுறைகள் :-
✓ பயணிகள் உறுப்பினர்களை சந்திப்பது, வணிகம் மற்றும் சுற்றுலா போன்ற காரணங்களுக்கு இந்த விசா இல்லா பயணத்தை பயன்படுத்தலாம். ஆனால், செய்தியாளர் பணிகள், கல்வி மற்றும் வேலை தொடர்பான பயணங்களுக்கு விசா தேவையாகும்.
✓ சீன அரசு 21 புதிய வருவாய் மற்றும் வெளியேறும் இடங்களை சேர்த்து, மொத்தம் 60 இடங்களை கொண்டுள்ளது.
✓ பயணிகள் 24 மாகாணங்களில் தங்க அனுமதி பெறுகிறார்கள், இதில் புதியதாக ஹைனான் தீவு, ஷான்ஷி, குஇஷோ, அன்புய், ஜியாங்சு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை குறித்து NIA செய்தி தொடர்பாளர் மாவ் சூ தெரிவித்திருப்பதாவது :-
இந்த புதிய மாற்றங்கள் சீனாவுக்கு வெளிநாட்டவர்களின் வருகையை அதிகரித்து, வணிக வாய்ப்புகளை உருவாக்கும். இது சீனாவை ஒரு சர்வதேச தரமுள்ள வணிக சூழலாக மாற்றும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
2024-ன் முதல் 11 மாதங்களில் சீனா 29 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்றுள்ளது, இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 86% அதிகரிப்பு ஆகும். இதில் 60% பயணிகள் விசா இல்லாமல் சீனாவில் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.