அதிக மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளில் துத்திக் கீரையும் அடங்கும்.மஞ்சள் நிற மூக்குத்தி பூக்கள் மற்றும் முற்கள் நிறைந்த காய்களை கொண்டிருக்கும் துத்தி செடி மூலம் முதலான நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது.
இந்த துத்தி இலை உடல் சூட்டை தணிக்கக் கூடியது.ஆயுர்வேத மருத்துவத்தில் துத்தி இலையை கொண்டு மாத்திரை தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.
துத்தி இலையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் எந்த நோய்களுக்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
1)துத்தி இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் மூலம் அதாவது பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.
2)துத்தி இலையை பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் உடலில் உள்ள சூடு முழுவதுமாக குறைந்துவிடும்.
3)வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும் பெண்கள் துத்தி இலையில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் பலன் கிடைக்கும்.
4)நெயில் துத்தி இலை கீரையை வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
5)துத்தி கீரையை அரைத்து சாறாக எடுத்து பாலில் கலந்து முகப் பருக்களை போக்கும் மருந்தாக பயன்படுத்தலாம்.
6)துத்தி இலை கீரையை கொண்டு ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறு சரியாகும்.
7)சூட்டு கொப்பளப் பிரச்சனையால் அவதியடைபவர்கள் துத்தி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
8)துத்தி கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பிரச்சனை சரியாகும்.
9)துத்தி இலையில் கஷாயம் செய்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.
10)துத்தி இலையை விளக்கெண்ணெயில் வாட்டி ஆசனவாய் பகுதியில் ஒத்தி எடுத்தால் வலி,எரிச்சல் குணமாகும்.அதேபோல் துத்தி இலையை அரைத்து கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.துத்தி பூவை பால் சேர்த்து அரைத்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகப்பொலிவு கிடைக்கும்.