Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனிநபர் வருமானவரி குறைப்பு! நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டிற்கு குவியும் பாராட்டு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என்னவெனில் வருமான வரி சலுகை என்பது தான். குறிப்பாக ரூபாய் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இதுவரை 20 சதவீதம் வருமான வரியாக கட்டி வந்ததால், அதன் சதவிகிதம் இந்த பட்ஜெட்டில் குறைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது

எதிர்பார்த்தபடியே தற்போது வரிச்சலுகை குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி குறைக்கப்பட்ட வரிச்சலுகையின் முழு விபரம் இதோ:

ரூ.5 லட்சம் – 7.5 லட்சம் 20% இருந்து 10% ஆக குறைப்பு!

ரூ.7.5 லட்சம் – 10 லட்சம் 20% இருந்து 15% ஆக குறைப்பு!

ரூ.10 லட்சம் – 12.5 லட்சம் 30% இருந்து 20% ஆக குறைப்பு!

ரூ.12.5 லட்சம் – 15 லட்சம் 30% இருந்து 25% ஆக குறைப்பு!

இந்த பட்ஜெட்டில் 5% முதல் 10% வரை வருமான வரிச் சலுகை குறைக்கப்பட்டுள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு வரிகள் குறைக்கப்பட்டால் தான் அனைத்து தரப்பினர்களும் வருமான வரியை முன்வந்து கட்டுவார்கள் என்று ஏற்கனவே பொருளாதார நிபுணர்கள் கூறி வந்த நிலையில் அதன்படியே தற்போது வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் மட்டுமே வருமானவரி என்பதால் இதுவரை வருமான வரி கட்டாதவர்கள் கூட வருமான வரி கட்ட முன்வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version