Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளச்சாராய உயிரிழப்பு 65 பேருக்கும் 10 லட்சம்.. உயர்நீதிமன்றம் காட்டிய அதிரடி உத்தரவு!!

10 lakhs for the death of 65 people due to counterfeiting.. Action order given by High Court!!

10 lakhs for the death of 65 people due to counterfeiting.. Action order given by High Court!!

கள்ளச்சாராய உயிரிழப்பு 65 பேருக்கும் 10 லட்சம்.. உயர்நீதிமன்றம் காட்டிய அதிரடி உத்தரவு!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரத்தில் தற்பொழுது வரை ஐம்பதற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இழப்பீடு தொகையாக தமிழக அரசு 10 லட்சம் வழங்குவதாக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முகமது என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அதில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு எப்படி தமிழக அரசு இவ்வளவு இழப்பீடு வழங்க முடியும். மேலும் விபத்துக்கள் உள்ளிட்டவைகளில் உயிரிழந்தவர்களுக்கு குறைவான இழப்பீடு வழங்கும் தமிழக அரசு கள்ளச்சாராயம் குடிப்பவர்களுக்கு மட்டும் இந்த தொகையை நிர்ணயித்திருப்பது சரிதானா இன்றும் இதனை ரத்து செய்யும்படியும் கூறியிருந்தார்.

அது மட்டுமின்றி தமிழக அரசு வழங்கும் இழப்பீடு குறித்து விளக்கம் அளிக்க கூறியும் தெரிவித்திருந்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் தமிழக அரசு இழப்பீடு தொகை குறித்து விவரிக்கும் படி உத்தரவிட்டிருந்தது. மேற்கொண்டு இரண்டு வாரங்கள் கழித்து இந்த வழக்கு நடைபெறும் என்று தெரிவித்திருந்தனர்.

அதன்படி இன்று நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கானது அமர்வுக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அரசின் முடிவுகளில் நீதிமன்றம் எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியாது அதேபோல இந்த வழக்கிற்குரிய சரியான ஆதாரமும் தற்பொழுது வரை சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கொண்டு இந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டதால் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் எந்த ஒரு தடையும் இல்லை.

Exit mobile version