நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால் இதயப் பிரச்சனை,சர்க்கரை போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்படும்.நாம் உண்ணும் உணவை பொறுத்து கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவும் உணவுகள்:
1)ஓட்ஸ்,தினை,கம்பு போன்ற சிறு தானிய உணவுகளை அதிகளவு சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
2)பீன்ஸ்,பாசி பயறு,கொள்ளு பயறு போன்றவை கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது.இதில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.
3)கோதுமை உணவுகள் மற்றும் பழுப்பு அரிசி உணவுகளை உட்கொண்டால் கெட்ட கொழுப்பு குறையும்.இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
4)சால்மன்,கெளுத்தி போன்ற ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன்களை அதிகளவு சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.தொடர்ந்து மீன் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.
5)பாதாம்,வால்நட் போன்றவற்றை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இருதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.
6)ஆளிவிதை,சியா விதை போன்றவற்றை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.கொண்டாடலையை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.
7)நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் கெட்ட கொழுப்பை கரைகிறது.பச்சை இலை காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.இதை உட்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு அளவு குறையும்.வெண்ணெய் பழத்தை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.
8)சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பு குறையும்.
9)டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு அளவு கட்டுப்படும்.டார்க் சாக்லேட்டில் உள்ள பிளவனாய்டுகள் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.
10)சோயா பால் மற்றும் மூலிகை தேநீர்,க்ரீன் டீ போன்றவை உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.முளைகட்டிய தானியங்கள்,ஊறவைத்த பருப்பு சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைகிறது.