இவர்களுக்கெல்லாம் ஊதியத்தில் 10% அதிகரிப்பு! அகவிலை 10% அதிகரிப்பு! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!
சட்டசபையில் இன்றும் அனைத்து கட்சி கூட்டம் காலை 10 மணி முதல் கேள்வி நேரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது சட்டசபையில் கைத்தறி அமைச்சர் காந்தி இவ்வாறு கூறினார். கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 10 சதவிகிதம் மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் என உயர்த்தி வழங்கப்படும் என்றும், கதர் பாலியஸ்டர் குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்கு, அதற்கு தகுந்தாற்போல், 20 லட்சம் செலவில் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்களும் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்காக ஆரோக்கிய நேசவாளர் நல்வாழ்வு காப்பீட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். மேலும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதமும் மாற்றியமைக்கப்படும் என்று மகிழ்ச்சி செய்தியைத் தெரிவித்தார்.
தற்போது திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஓவ்வொரு திட்டமும் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது. இன்று அறிவித்த இந்த திட்டமும் மக்களை சென்று சேரும் போது மக்கள் மிகவும் மகிழ்வார்கள்.