Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி?

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் புதிதாக வாங்கப்பட்டிருந்த கிரேனை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் மீட்டெடுத்தனர்.இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர்களை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கிரேன் சரிந்து விழுந்தில் சம்பவ இடத்திற்கு வந்த வேலை செய்பவரின் குடும்பத்தினர் உள்ளே செல்ல முற்பட்டனர். அங்கிருந்து அறி அதிகாரிகள் அவர்களை உள்ளே விடாததால், சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் அதிகாரி ஆர்கே மீனாவிடம் முற்றுகையிட்டனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிலர் உயிருக்குப் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version