உடல் சூடு குறைய நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 10 வழிமுறைகள்!
பருவகால மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உடல் சூடு ஏற்படுகிறது. உடல் சூட்டால் மூலம், பெண்களுக்கு உதிரப்போக்கு, முடி கொட்டல், பித்தம், சூட்டு கொப்பளம், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உடல் சூடு அறிகுறி..
*அடிக்கடி எரிச்சலுடன் மலம் வெளியேறுதல்
*சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு
*சூடான சிறுநீர் வெளியேறுதல்
*கண் சூடு, எரிச்சல்
*வயிறு உப்பசம்
*உடல் சோர்வு
*தூக்கமின்மை
உடல் சூடு குறைய வழிகள்…
1.காலையில் எழுந்த உடன் 1/2 லிட்டர் குளிர்ந்த நீர் குடிக்க வேண்டும்.
2.உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை மலம், சிறுநீர் வழியாக வெளியேற்ற வேண்டும்.
3.பசித்தால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். பசிக்காத சமையத்தில் சாப்பிட்டால் செரிமானம் ஆகாமல் உடல் சூடு ஏற்படும்.
4.உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது.
5.தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
6.எண்ணெய் உணவுகள், அசைவ உணவுகள் இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ள கூடாது.
7.ஆண், பெண் தாம்பத்திய உறவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
8.கோபம், பதட்டத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
9.வாரத்தில் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
10.தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து வர வேண்டும்.