Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோடையில் உங்கள் உடலை சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் 10 வகை ஆரோக்கிய உணவுகள்!!

உடலில் அதிகமாக சூடு ஏற்படுவது கோடை கால பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்றது.தட்ப வெட்பநிலை,நீர்ச்சத்து குறைபாடு,ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் போன்ற காரணங்களால் உடல் சூடு அதிகமாகிறது.உடல் சூட்டால் தோல் அலர்ஜி,சூட்டு கொப்பளம்,அம்மை,வியர்க்குரு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

உடல் சூட்டை குறைப்பதில் உணவிற்கு முக்கிய பங்குண்டு.உடல் சூட்டை தணித்து சீரான வெப்பநிலையை பராமரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்னெ என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1)தண்ணீர்

உடல் சூட்டை தணிக்க நீங்கள் தினமும் 3 லிட்டர் தண்ணீரை அவசியம் பருக வேண்டும்.உடலுக்கு தேவையான தண்ணீர் பருகுவதால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்படுகிறது.

2)தண்ணீர் பழம்

கிட்டத்தட்ட 90 சதவீதம் தண்ணீர் சத்து கொண்டிருக்கும் தர்பூசணி பழத்தை உட்கொண்டால் உடல் சூடு தணியும்.

3)சின்ன வெங்காயம்

குளிர்ச்சி நிறைந்த சின்ன வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.பருவ கால நோய் பாதிப்புகள் அண்டாமல் இருக்க சின்ன வெங்காயத்தை சாப்பிடலாம்.

4)வெள்ளரி

நீர்ச்சத்து நிறைந்து காணப்படும் வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு முழுமையாக தணியும்.

5)தயிர்

பால் பொருளான தயிர் அதிக குளிர்ச்சி நிறைந்த உணவாகும்.இந்த தயிரை மோராக மாற்றி குடித்தால் உடல் சூடு,வயிறு எரிச்சல் குணமாகும்.

6)இளநீர் மற்றும் தேங்காய் நீர்

தினமும் ஒரு இளநீர் குடித்தால் வெயில் கால நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துவிடலாம்.தண்ணீரை போன்று இளநீரும் அதிக குளிர்ச்சி தன்மை வாய்ந்ததாகும்.

7)புதினா

தினமும் காலையில் ஒரு கிளாஸ் புதினா தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணிவதோடு புத்துணர்வு கிடைக்கும்.

8)கற்றாழை ஜூஸ்

குளிர்ச்சி நிறைந்த கற்றாழையை கொண்டு ஜூஸ் தயாரித்து பருகினால் உடல் சூடு முழுமையாக தணியும்.

9)கீரை வகைகள்

வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை கீரை உணவுகளை சாப்பிட்டால் உடல் சூடாகாமல் இருக்கும்.

10)எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு

வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சை,ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் ஜூஸ் செய்து குடித்தால் உடல் சூடு தணியும்.

Exit mobile version