பயனுள்ள 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!! டாக்டர் பீஸ் பற்றிய கவலை இனி இல்லை!!

0
192
10 Useful Grandma Medicine Tips!! No more worries about Dr. Peace!!

முன்பெல்லாம் சளி,இருமல் போன்ற நோய் பாதிப்புகள் குணமாக பாட்டி வைத்தியம் பயன்படுத்தப்பட்டு வந்தது.ஆனால் இன்று சிறு பாதிப்புகள் ஏற்பட்டால் கூட உடனே டாக்டரிடம் ஓடும் நிலையில் உள்ளோம்.ஆனால் மருந்து மாத்திரை இல்லாமல் வெறும் பாட்டி வைத்தியத்தை வைத்தே பல நோய்களை குணமாக்கி கொள்ளமுடியும்.

1)நீர்க்கோவை

நான்கு கரு மிளகை இடித்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கோவை பிரச்சனை சரியாகும்.

2)தொடர் இருமல்

மிளகு மற்றும் கிராம்பு சம அளவு எடுத்து நெயில் வறுத்து பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் இருமல் நிற்கும்.

3)பல் வலி

அருகம்புல்லை பொடியாக்கி பற்களை தேய்த்தால் வலி குறையும்.அதேபோல் சிறிதளவு தேனை எடுத்து பல் ஈறுகளில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து வாயை கொப்பளித்தால் ஈறுகள் பலப்படும்.

4)உதடு வெடிப்பு

சிறிதளவு தேங்காய் எண்ணெயை உதடுகளில் அப்ளை செய்தால் வெடிப்பு,உதட்டு புண் அனைத்தும் சீக்கிரம் குணமாகும்.

5)பசியின்மை

துளசி இலைகளை காய வைத்து பொடியாக்கி தேநீர் செய்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும்.

6)கண் சூடு

தாய் பாலை கண்களில் விட்டால் கண் சூடு,கண் எரிச்சல் அனைத்தும் சரியாகும்.

7)மூக்கில் இரத்தம் வடிதல்

மாதுளை இலையை அரைத்து சாறு எடுத்து மூக்கு துவாரத்தில் விட்டால் இரத்தம் வடிவது நிற்கும்.

8)தும்மல்

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் சித்தரத்தையை வாங்கி பொடித்து பாலில் கலந்து குடித்தால் தும்மல் நிற்கும்.

9)தொண்டை வலி

ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை சூடுபடுத்தி ஆறவிட்டு தேன் கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

10)மூக்கடைப்பு

சிறிதளவு மிளகு,ஓமம் மற்றும் பூண்டு பற்களை வைத்து கசாயம் செய்து குடித்தால் மூக்கடைப்பு நீங்கும்.அதேபோல் முருங்கை கீரையில் கஷாயம் செய்து குடித்தால் எலும்புகள் வலிமை பெறும்.