சட்டவிரோதமாக வழங்கப்படக்கூடிய கடன்களை தடுக்கவும் கடன் பெறுபவர்கள் தேவையற்ற வகையில் துன்புறுத்தப்படுதலை தடுக்கவும் மத்திய அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
BULA என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவின் முக்கிய நோக்கமானது, ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் வழங்கும் நடவடிக்கைகளை தடை செய்வது மற்றும் கடன் வாங்குபவர்களின் உரிமைகளை பாதுகாப்பதாகும்.
அதிலும் குறிப்பாக, RBI அல்லது பிற ஒழுங்குமுறை நிதி நிறுவனங்களைத் தவிர அங்கீகரிக்கப்படாத நபர்கள் அல்லது நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்களை இது தடை செய்கிறது. டிஜிட்டல் மூலமாகவோ அல்லது வேறு வழியாகவோ பணம் கொடுக்கப்படுகிறது என்றால் அதற்கும் இந்த விதியானது பொருந்தும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே, மக்களை ஏமாற்றுவதற்காக கடன்கள் வழங்கப்பட்டு அவர்களுடைய உரிமைகள் திருடப்பட்டு சில சந்தர்ப்பங்களினாலும் அல்லது கடனை திரும்பப்பெறும் முறைகளில் அதிருப்தி அடைந்து தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர். இதனை மனதில் கொண்டே இந்த புதிய விதியானது உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த சட்டத்தை மீறி டிஜிட்டல் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் கடன் கொடுத்தால் அதற்கான தண்டனையாக 2 ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை நிச்சயம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடன் பெற்றவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவது, துன்புறுத்துவது அல்லது கடன் வசூலிப்பதற்காக ஏதேனும் நியாயமற்ற முறைகளை மேற்கொண்டால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மட்டும் இன்றி கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என்று மசோதாவில் முன்மொழியபட்டு இருக்கிறது.