10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு!

0
129
10 years of love is all gone! What he says is blatant! Parental blame!

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு!

கேரளாவில் மறைத்து வைத்து வாழ்ந்த காதலைப்பற்றி இரண்டு நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்த நிலையில் நம் செய்தியில் கூட கூறி இருந்தோம். தற்போது அதைப்பற்றி பல முடிச்சுகள் வெளி வர தொடங்கி உள்ளன.

அன்றே அந்த விஷயத்தை பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கிறது என்று பலர் கூறி இருந்தாலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தற்போது ரஹ்மானின் பெற்றோர், அந்த விஷயத்தை வெளிப்படையாக பேசி உள்ளனர்.

ரஹ்மானின் பெற்றோர் – முகமது கரீம் -ஆதிகா – தங்கள் மகன் பொய் சொல்வதாக  குற்றம் சாட்டியுள்ளனர், மேலும் அவரது கதையில் உள்ள ஓட்டைகளையும்  சுட்டிக்காட்டி உள்ளனர். அந்த வீட்டில் அவருடன் பெற்றோர் மற்றும் அவரது சகோதரியும் வாழ்ந்து வந்த நிலையில், அதுவும் அந்த சிறிய வீட்டில் எப்படி எங்களுக்கு தெரியாமல் ஒரு பெண் இருக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

சஜீதா அறையிலிருந்து வெளியே வந்ததாகக் கூறப்படும் ஜன்னலின் கம்பிகள் மூன்று மாதங்களுக்கு முன்புதான் அகற்றப்பட்டன. ரஹ்மான் அரை சுவர் கொண்ட ஒரு அறையில் தங்கியிருந்தார். இந்த அறையில் யாராவது தங்கியிருந்தால், நாங்கள் அதை அறிந்திருப்போம். ரஹ்மானுக்கு மன நல பிரச்சினைகள் இருந்தன.

மேலும் அவர்கள் கூறும் போது அந்த அறையில் என்ன நடந்தாலும் சத்தம் கேட்கும். ரஹ்மான் சத்தமாக அழுததைக் கேட்ட நேரங்களைத் தவிர, மற்ற நேரம் அறையில் வேறு எதுவும் கேட்டதில்லை எனவும் கூறினர்.

மகளிர் ஆணையத் தலைவர் எம்.சி. ஜோசபின்  அந்த அறையை பார்வையிட்டார் பின்னர் அப்போது அவர் இந்த வழக்கில் பல மர்மங்கள் உள்ளன. நாங்கள் நென்மாரா போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு அறிக்கை கேட்டுள்ளோம். பத்து ஆண்டுகளாக யாரும் ஒருவர் வெளியேறவில்லை என்று நான் கருதுகிறேன்.

ரஹ்மானின்  குடும்ப உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பப்பட வேண்டும். ஒரு பெண்ணை அடைத்து வைப்பது குற்றம். ரஹ்மான் ரிமோட்டைப் பயன்படுத்தி கதவு பூட்டை வைத்து இருந்தது செய்யபட்டது  வெளியில் இருந்து அதை யாரும் திறக்க முடியாது.

பத்து ஆண்டுகளில் அவருக்கு நோய் வரவில்லை என்பதும் சந்தேகமே. இத்தகைய காதல் உள்ளது என்பது நம்பமுடியாதது, அவர்கள் ஒன்றாக வாழ அனுமதித்த போலீஸ் முடிவு நியாயமானது, ஆனால் பத்து ஆண்டுகளின் மர்மம் அவிழ்க்கப்பட வேண்டும், என்றும் அவர் கூறினார்.

எது எப்படியோ அவர்கள் வாழ்வில் பிரச்சனை இல்லாமல் இருந்தால் சரிதான்.