Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும்  100 ஏசி எலக்ட்ரிக்  பஸ்! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும்  100 ஏசி எலக்ட்ரிக்  பஸ்! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சென்னை மாநகராட்சியில் மட்டும் 100 ஏசி மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக திட்டமிட்டு செயல்படுகின்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டி தள்ளும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் உலகம் முழுக்க ஏரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்து கின்றனர். இதனால் மக்களும் அரசுகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசும் லேசாக குறையும் என்பதால் மின்சார வாகனங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளன.

இந்த நிலையில் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 500 மின்சார பேருந்துகளையும், முதல் கட்டமாக சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளையும் இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை திட்டமிட்டு வருகின்றது. இதற்காக சென்னை பல்லவன் இல்லம், மத்திய பணிமனை, திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட ஆறு மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் போக்குவரத்துறை முழு வீச்சில் இறங்கி இருக்கிறது. மேலும் இதற்கான டெண்டர்களை போக்குவரத்துறை கோரி இருக்கிறது. இந்த திட்டத்தில் ஆர்வம் கொண்ட தேசிய மற்றும் சர்வதேச பேருந்து உற்பத்தி நிறுவனங்கள் டெண்டர்களில் பங்கேற்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி தெரிவிக்கையில் மின்சார வாகனங்களின் சக்தி என்பது சார்ஜ் செய்வதற்கான வசதிகளை பொறுத்தே அமையும்.

இந்த டெண்டர் பேருந்து உற்பத்தி மட்டுமின்றி சார்ஜிங் மையங்கள், பேருந்து பராமரிப்பு, பழுதுநீக்கம் என அனைத்தையும் அடக்கும். 500 ஏசி மின்சார பேருந்துகள் சென்னையை கடந்து கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் இயக்கப்பட தயாராக உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மாநில வளர்ச்சி வங்கியிட 500 மின்சார வாகனங்கள் உட்பட 2,000 பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. மேற்கூறியவை அனைத்தும் விரைவில் செயலுக்கு வரும் என்று அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Exit mobile version