வறட்டு இருமல் 100% குணமாக.. தேனுடன் இந்த பொருளை மிக்ஸ் செய்து சாப்பிடுங்கள்!!

0
108
100% cure for dry cough.. Mix this product with honey and eat it!!

குளிர்காலத்தில் சளி தொந்தரவு படுத்தி எடுத்துவிடும் என்பது அறிந்த ஒன்றே.இந்த சளி உடலுக்கு உள்ளேயே படிந்து வெளியேறாமல் வறட்டு இருமலாக மாறுகிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள உங்களுக்கான கை வைத்தியம் இதோ.

1)தேன்
2)எலுமிச்சை

ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் உள்ள சாறை பௌலிற்கு பிழிந்து கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

இதை தினமும் மூன்றுவேளை சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் கட்டுப்படும்.இந்த தேன் எலுமிச்சை சாறை பருகிய பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1)மிளகு
2)சுக்கு
3)திப்பிலி

அரை தேக்கரண்டி இடித்த மிளகு தூள்,கால் தேக்கரண்டி சுக்குத் தூள்,அரை தேக்கரண்டி திப்பிலி பொடியை கிண்ணத்தில் போட்டு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து காலை மாலை இரவு என மூன்றுவேளையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் கட்டுப்படும்.

1)பாதாம் பருப்பு
2)தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.தண்ணீர் லேசாக சூடானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி கொள்ளுங்கள்.

பிறகு ஐந்து பாதாமை நன்றாக மென்று சாப்பிட்டுவிட்டு சூடுபடுத்திய நீரை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

1)கடுக்காய்
2)சித்தரத்தை

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கடுக்காய் மற்றும் சித்தரத்தையை சம அளவு வாங்கி பவுடராக்கி கொள்ளுங்கள்.

பிறகு ஒரு கிண்ணத்தில் கால் தேக்கரண்டி கடுக்காய் பொடி மற்றும் கால் தேக்கரண்டி சித்தரத்தை பொடி சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி பருகினால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.