கொரோனா தொற்றால் 100% ரயில்கள் ஓடாது! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
கொரோனாவானது சீனாவிலிருந்து பரவி மக்கள் அனைவரையும் அதிக அளவு பாதித்தது.இதனைத்தொடர்ந்து சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பாரபட்சம் பார்க்காமல் பல உயிர்களை காவு வாங்கியது.இதைக் கட்டுபடுத்தமுடியாமல் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்கள் தனிமை படுத்தப்பட்டு அதன்பின்னே அனுமதிக்கப்பட்டனர்.
மக்கள் தேவையின்றி வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.அத்தோடு பல கட்டுபாடுகளை வழிவகுத்தனர்.அதை கடைபிடிக்குமாறு வலியுறுத்தவும் செய்தனர்.இவ்வாறு கட்டுபாடுகளுடன் இருந்ததால் கொரோனா வின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.அதிக உயிர்களை காவு வாங்கிய கொரோனாவை மறந்து மக்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்ததால் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.மகராஷ்டிராவிலுள்ள நாக்பூரில் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது ரயில் போக்குவரத்துகள் முற்றிலும் தடை செய்யப்பட்டன.கொரோனா தொற்றானது குறைந்த நிலையில் 65 சதவீதம் அளவுக்கு இயக்கப்படும் என அறிவிப்புகள் வெளிவந்தது.ஆனால் 100 சதவீதம் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு,சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை புறநகர் ரயில்கள் பின்பற்ற இயலாது.ஆகயால் அதிக அளவு கொரோனா தோற்று பரவும் வாய்புகள் உள்ளது.தடுப்பூசி போடும் பணிகள் முழுமையடைந்த பிறகோ அலது இந்த கொரோனாவின் தாக்கம் குறைந்த பிறகோ மனுதாரர் இதே கோரிக்கையை எழுப்பலாம் என்று கூறினார்.தற்போது 100 சதவீத ரயில் சேவை செயல்பட அனுமதிக்கப்படாது எனவும் கூறினார்.