Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சன்னி லியோனுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை!! சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோசடியால் அதிர்ச்சி!!  

1000 per month stipend fraud in Chhattisgarh using Sunny Leone's name

1000 per month stipend fraud in Chhattisgarh using Sunny Leone's name

Chhattisgarh State: சன்னி லியோன் பெயரை பயன்படுத்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று மோசடி நடந்துள்ளது.

தமிழகத்தில் மகளிர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது . இந்த தொகை மகளிர் வங்கி கணக்கில் மாதம் தோறும் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் தமிழக அரசால் செலுத்தப்படும்.  இந்த திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற பெயரில் திருமணம் ஆன பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த நிலையில் அம் மாநிலத்தில் சன்னி லியோன் பெயரை பயன்படுத்தி  மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று மோசடி  நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

அதாவது, சத்தீஸ்கர் மாநிலம்  பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் வீரேந்திர ஜோஷி என்ற நபர் சன்னி லியோன் பெயரில் வங்கியில் போலி கணக்கு தொடங்கி இருக்கிறார். அந்த போலி வங்கி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த மோசடியை அறிந்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் அந்த வங்கி கணக்கை முடக்குவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார். சைபர் கிரைம் என்பது மிகவும் சுலபமாக விட்ட குற்றச் செயலாகும் . இதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் இக்குற்றங்கள் குறைந்த பாடில்லை.

நாளுக்கு நாள் அதிகரித்து புது புது வழிகளில் இக்குற்றம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சத்திஸ்கர் மாநிலத்தில் அரசின் திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு மாதந்தோறும் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஒருவர் போலி வங்கி கணக்கை பயன்படுத்தி பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசின் திட்டத்தை பெற தகுதி வாய்ந்த நபர்கள் பலருக்கு சரிவர கடைக்கு பெற வில்லை என்று குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் அரசின் திட்டத்தை தவறாக ஒருவர் பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மோசடி குறித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் .

Exit mobile version