திருச்செந்தூரில் முருகனை வழிபட 1000 ரூபாய் கட்டணம்! அதிர்ச்சியில் பக்தர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! 

0
169
1000 rupees fee to worship Murugan in Tiruchendur! Devotees in shock! Action order issued by the court!

 

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் பொழுது முருகனை விரைவாக வழிபட 1000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து கோயில் நிர்வாகம் இது குறித்து பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் மூன்று நாட்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.

பழனி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை என அறுபடை கோவில்களில் இருந்து முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் திருச்செந்தூர் முருகன் கோயில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள முருகனை வழிபடுவதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலம் வெளிநாடு என உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தருகின்றனர். இந்த திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விழா தொடங்கும். அவ்வாறு தொடங்கும் விழா 6 நாட்கள் நடைபெறும். இந்த முறை நவம்பர் 2ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கவுள்ளது.

கந்த சஷ்டி விழா தொடங்கும் நாள் முதல் முடியும் நாள் வரை பக்தர்கள் அனைவரும் திருச்செந்தூரில் தங்கி இருந்து முருகனை வழிபடுவது வழக்கம். கந்த சஷ்டி விழாவின் ஒரு அங்கமாக முருகன் சூரனை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறும். இவ்வாறு இருக்க கந்த சஷ்டி விழாவின் பொழுது முருகனை வழிபட 1000 ரூபாய் விரைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்த சஷ்டி விழாவின் பொழுது பக்தர்கள் விரைவாக முருகனை வழிபட வேண்டும் என்பதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருச்செந்தூர் கோயிலில் இரண்டு தரிசன வகைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதாவது 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் என்று இரண்டு வகை கட்டண தரிசனம் மட்டுமே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அந்த வகையில் திருச்செந்தூர் கோயிலில் தற்பொழுது வரை 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் என்று இரண்டு வகைகள் மட்டுமே அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த சஷ்டி விழா நடைபெறுவதை முன்னிட்டு விரைவு கட்டணம் 1000 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண நிர்ணயம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கு மத்தியில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கான உண்டியல் என்னும் பணி நடைபெற்று முடிந்ததை அடுத்து 5.15 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் 2 கிலோ 352 கிராம் தங்கமும் 41 கிலோ 998 கிராம் வெள்ளியும், 1589 வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

அதே போல கோயில் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலமாக 1 லட்சத்து 67 ஆயிரத்து 860 ரூபாய் கிடைத்துள்ளதாகவும் கோசாலை பராமரிப்பின் மூலமாக 82 ஆயிரத்து 722 ரூபாயும் கிடைத்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.