இன்று 1000 ரூபாய் வங்கி கணக்குகளில் கிடைக்கும்! பெண்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிட்ட அரசு!
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் இன்று(ஜூலை15) அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் கூடுதலாக 1.48 லட்சம் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு அறிவித்திருந்தது. இதையடுத்து திமுக அரசு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முக. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருந்த பதவியேற்ற பின்னர் கடந்த 2023ம் ஆண்டு பெண்களின் விவரங்கள் அனைத்தும் வாங்கப்பட்டு அதில் தகுதியான பெண்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல் கட்டமாக செயல்படுத்தும் பொழுது 1000 ரூபாய் பெறுவதற்கு 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களுடைய விவரங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு அவர்களில் தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
இதையடுத்து தகுதி இருந்தும் 1000 ரூபாய் கிடைக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களை இரண்டாம் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு 7.35 லட்சம் மகளிருக்கு 1000 ருபாய் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது வரை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் 1000 ரூபாய் பெற்று வருகின்றனர். இவர்களின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு மத்தியில் லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் 11.85 லட்சம் பெண்களுக்கு மேல் முறையீடு செய்ய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு எப்பொழுது மகளிர் உரிமைத் தொகை எப்பொழுது வழங்கப்படும் என்று கேள்வி எழுந்த நிலையில் தமிழக அரசு இவர்களில் 1.48 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இன்று(ஜூலை15) மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியான அனைத்து பெண்களுக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த நிதியாண்டில் அதாவது 2023-2024ம் நிதியாண்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 8123.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 2024-2025ம் நிதியாண்டுக்கு தமிழக அரசு 13722.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக சுமார் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் மாதந்தோறும் பயன் அடைந்து வருகிறார்கள்.