Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ 1000!!மார்ச் மாதம் முதல் வழங்க தமிழக அரசு முடிவு!!

1000 rupees per month for all the girls who applied!! Tamil Nadu government decided to give it from March!!

1000 rupees per month for all the girls who applied!! Tamil Nadu government decided to give it from March!!

மகளிர் உரிமைத் தொகை கோரி சமர்ப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ 1000 வரும் மார்ச் மாதம் முதல் வழங்க தமிழ்நாடு அரசு தீர்மானம் செய்து உள்ளனர்.மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல். அமலுக்கு வந்தது.இதற்காக 2 கோடி ரேஷன் அட்டைதரார்களுக்கு இல்லம் தேடி வழங்கப்பட்டது இது திமுக தேர்தலில் தெரிவிப்பது போல் மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

1.15 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் 15 ஆம் தேதி வங்கியில் ரூ 1000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டு அரசு விதித்த நிபந்தனைகளின் படி தேர்வு செய்யப்பட்ட1.66 கோடி பேர் பயன் பெற்று வருகிறார்கள்

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான நிபந்தனைகளால், சிலர் ரூ.1000 உதவித்தொகையை பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
தங்கள் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்காக வரும் சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

ஏன் திமுகவுக்கு நாங்கள் ஓட்டு போடவில்லையா? ரூ 1000 பெறுபவர்கள் மட்டும்தானா ஓட்டு போட்டார்கள்?” என்ற கேள்விகளை பொதுமக்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இதனால், மக்கள் பிரதிநிதிகள் நெருக்கடியில் ஆளாகி, அரசின் நிலையை விளக்க வேண்டிய சூழல் உருவானது.

பொதுமக்களின் அதிருப்தி மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அனைத்து பயனாளிகளும் நியாயமான ரூ.1000 உரிமைத் தொகையை பெறுவதற்காக, முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1 ஆம் தேதி முதல், விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க அரசு அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரத்தில், அரசு சில நிபந்தனைகளை பின்பற்றியுள்ளது. அதன்படி, வருமான வரி கட்டும் பெண்கள், சொந்த வீடு, நிலம், கார், பைக் வைத்திருக்கும் பெண்கள், ஆண்டிற்கு 2400 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் பெண்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அனைவருக்கும் வழங்கப்படுமா என்பது குறித்து மக்களிடம் கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான மேலும் அறிவிப்புகள் வரும் காலங்களில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில், தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று வழங்கிவரும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 இந்த முறை நீக்கப்பட்டுள்ளது. அரிசி, கரும்பு, சர்க்கரை மற்றும் இலவச வேட்டி-சேலை போன்றவை மட்டும் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த மாற்றம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், மாநிலத்தின் நிதி நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதனால், மக்கள் அரசின் எதிர்கால அறிவிப்புகளை பெரிதும் எதிர்நோக்கி உள்ளனர்.

Exit mobile version