இவர்களுக்கு மட்டும் தான் மாத உரிமைத் தொகை! வெளியானது அதிரடி அறிவிப்பு!

0
100

]தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகையை வழங்குவதற்கு 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு, நோய் தொற்று நிவாரணம், உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை வழங்குகிறது என கூறி இருக்கிறார்.

இதில் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், போன்ற 40 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஆகவே குடும்பத்தலைவிக்கான மாதம் 1000 ரூபாய் தொகையை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.

ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு, உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திலும் முதியோர் உதவித்தொகை, விவசாய நிதி உதவி, என மத்திய, மாநில, அரசின் திட்டங்களை பெறும் பயனாளிகள் ஏழ்மையில் இருப்பவர்களுடைய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆய்வுக்கு பிறகு தான் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும், கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வில் முதலில் இலவச எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் தற்சமயம் 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் ஒட்டுமொத்த பயனாளிகளுக்கும் அடையாளம் காணப்பட்ட பிறகு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார் அந்த கூட்டுறவுத்துறை அதிகாரி.