169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

0
94

169 நகரங்களில் 10000 மின்சார பேருந்துகள் இயக்கம்-மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.குறிப்பாக நாடு முழுவதும் உள்ள 169 நகரங்களில் ‘பிரதமரின் மின்சார பேருந்து சேவை’ என்ற திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் ரூ.57000 கோடி செலவாகும் நிலையில் மத்திய மற்றும் மாநில நிதியுதவியில் இருந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி மத்திய அரசு தனது பங்காக ரூ.20 ஆயிரம் கோடியை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ‘பிரதமரின் மின்சார பேருந்து சேவை’ திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறையும் என்பதினால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மூன்று லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் என மொத்தம் 169 நகரங்களில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று சொல்ல படுகின்றது.

மேலும் இந்திய ரயில்வேயில் 32,500 கோடி செலவில் மொத்தம் 2,339 கி.மீ. தொலைவிற்க்கு 7 பன்முக வழித்தட திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்த திட்டத்திற்கான முழு செலவுகளையும் மத்திய அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசம்,பிகார், தெலங்கானா,ஆந்திரப் பிரதேசம்,மகாராஷ்டிரா,குஜராத்,ஒடிசா,ஜார்க்கண்ட்,மேற்குவங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 35 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றன.இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றது.இதையடுத்து மக்களுக்கு போக்குவரத்து எளிதாவதோடு,கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பு ஆகும்.