இந்த 10000 ரூபாய் சம்பளம் வாங்கும் என்னையும் மதித்து அவர் கூப்பிட்டது தான் ஆச்சரியம்! நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வீட்டு திருமண விழாவில் ….1968, நவம்பர் 3-ம் தேதி அன்று தேதி சாந்திக்கும் நாராயணசாமிக்கும் ஆபட்ஸ்பரியில் திருமணம்.
சென்னையில் உள்ள எல்லா மண்டபத்தை விட அப்போது அந்தக் கல்யாண மண்டபம்தான் பெரியது. அனைத்து VIP மற்றும் பெரிய நடிகர்களின் வீட்டுத் திருமணங்கள் அங்கேதான் நடக்கும்.
சிவாஜி வீட்டு முதல் கல்யாணம். அவரது மகள் கல்யாணம். அவருக்கு ஆசியாவின் சிறந்த நடிகர்னு பாராட்டி இருக்கின்றனர். புகழின் உச்சியில் இருக்கிறாராம் அவர்.
காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என்று ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, இந்தி ஹீரோக்கள், உலகப் புகழ் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் வரை அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் அதை பார்க்க வந்து இருந்தார்களாம்.
சினிமா உலகில், எல்லாக் கலைஞர்களுக்கும் வீடு தேடிப் போய் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் அவர்.அப்பொழுது 10 ஆயிரம் ரூபாய்க்கு நடித்துக் கொண்டிருந்த வளரும் நடிகனான சிவகுமார் அவர்களுக்கும் அழைப்பிதழ் வந்துள்ளது.
கல்யாண மண்டபத்தில் ஒரு புத்தகத்தை வைத்து கொண்டு யார் வந்தார்கள் என லிஸ்ட் எடுப்பார்.அதனால் போக வேண்டிய தருணம் வந்துள்ளது.
தேனாம்பேட்டை சிக்னலிலிருந்து ஆபட்ஸ்பரியின் வலதுபுறம் அப்போது ஜெமினி ரவுண்டானா இருந்தது. அதுவரை ரோடு முழுக்க கூட்டமாம்.
சிவகுமாருக்கு சொந்தமாக வீடோ, காரோ இல்லை. அந்த அளவு வளரவில்லை. கடைசியாக ஒரு டாக்ஸி பிடித்து கொண்டு தேனாம்பேட்டை வழி மவுண்ட் ரோடில் கல்யாண மண்டப வாசலை நெருங்கிவிடவே. அட! இத பார்றா சிவகுமாரு! ஒருத்தன் சட்டையைப் பிடித்து இழுக்கிறான். ஒருவன் கன்னத்தைக் கிள்ளுகிறான். இன்னொருவன் தலைமுடியைக் கலைத்து மகிழ்கிறான்.அப்பொழுது அவர் மிகவும் மகிழ்ந்து இருக்கிறார்.
எதிரே சிவாஜி வேட்டி சட்டையில். ஆனால், ராஜராஜ சோழன் கம்பீரத்தோடு, நண்பர்கள் புடைசூழ வாயிலில் வரவேற்பாளராக நிற்கிறாராம்.
சிவாஜி கண்ணில் பட்டுவிட வேண்டும். ஆனால், நேராகப் போய் வணக்கம் சொல்ல துணிவு வரவில்லையாம் சிவகுமாருக்கு. உடனே உள்ளே போய்விட்டாராம்.
தாலி கட்டும் விழா முடிந்தது. மூச்சு முட்டும் கூட்டம். மணப்பந்தலை நெருங்க பார்த்தால் திருமணப் பரிசு வழங்கும் அளவுக்கு செலவு செய்ய அவரால் முடியாதாம் அதனால் திரும்பி விட்டாராம்.
ஆயிரம் பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் அடுத்த பந்திக்கு 1000 பேர் நிற்கிறார்கள் அதனால் ப்படியே வெளியே போ
ய்விட்டாராம்.